உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி

ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி மூலம் 1,84,597 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வசூல் ஆன ரூ. 1,73,813 கோடியை காட்டிலும் தற்போது கூடுதலாக 6.2 சதவீதம் அதிகம் ஆகும்.கடந்த ஜூன் மாதம் வசூலான ரூ.1,73,813 கோடியில்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dq2v5o6n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய ஜிஎஸ்டி -34,558 கோடி ரூபாய்மாநில ஜிஎஸ்டி - 43,268 கோடி ரூபாய்ஐஜிஎஸ்டி - 93,280 கோடி ரூபாய்செஸ்- 13,491 கோடி ரூபாய் அடங்கும்.ஜூன் மாத வசூலில் உள்நாட்டு வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருமானம் 4.6 சதவீதம் உயர்ந்து ரூ.1.38 லட்சம் கோடியாகவும், இறக்குமதியில் இருந்து வந்த ஜிஎஸ்டி வசூல் 11.4 சதவீதம் உயர்ந்து ரூ.46,690 கோடியாகவும் உள்ளது.அதே நேரத்தில் கடந்த மே மாதம் வசூலான ரூ.2.01 லட்சம் கோடி, ஏப்ரல் மாதம் வசூலான ரூ.2.37 லட்சம் கோடியை விட ஜூன் மாத வசூல் குறைந்துள்ளது.

மாநில வாரியாக

மஹாராஷ்டிராவில் - 30,553 கோடி ரூபாய்கர்நாடகா - 13,409 கோடி ரூபாய்குஜராத்- 11,040 கோடி ரூபாய்தமிழகம் -10, 676 கோடி ரூபாய்ஹரியானா - 9,959 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது ஜிஎஸ்டி வசூல் இரு மடங்காகி உள்ளது. 2025 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஜூலை 02, 2025 11:16

உ.பி க்கு இன்னும் ஒரு லட்சம் கோடி அதிகமாக் குடுங்க. அப்பத்தான் அவிங்க சாதனை படைக்க முடியும்.


R Dhasarathan
ஜூலை 01, 2025 22:44

வரியின் மூலமாக ஒரு நாடு முன்னேற முடியாது என்பதை எப்பொழுது இவர்கள் உணர்வார்கள் என்று தெரியவில்லை..... தவறான வழிகாட்டுதல்....


ஆரூர் ரங்
ஜூலை 01, 2025 22:00

வெறும் ஆறு சதவீதம் வசூல் செய்யும். மாநிலம் முன்னேறிய மாநிலமா? நம்மைவிட மிகச்சிறிய குஜராத் டாப் பில் உள்ளது. மஹாராஷ்டிர வசூலிலும் பெரும்பகுதி மும்பையில் அலுவலகமும் குஜராத்தில் ஆலையும் வைத்திருப்பவர்கள் கட்டுவது.


J.Isaac
ஜூலை 01, 2025 21:25

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை கொடுக்க ஏழை, எளிய, பாமர மக்களின் இரத்தம்


Nagendran,Erode
ஜூலை 02, 2025 03:30

பெங்களூர்ல இருந்து இந்த பொருளாதாரப் புளி சொல்லிட்டாரு கேட்டுக்கங்க. ஏலே கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாம பேசாம போயிரு அங்கிட்டு....


Priyan Vadanad
ஜூலை 01, 2025 21:18

நிலத்தடியிலிருந்து எடுக்கும் தண்ணீருக்கும் வரி போட்டு கிடைப்பதையும் சேர்த்தால் அம்மாடியோவ் சில வராகடனாளர்களுக்கு லக்கி ப்ரைஸ்.


Ramesh Sargam
ஜூலை 01, 2025 21:08

உடனே தமிழக முதல்வர், திருப்புவனம் நிகழ்வை திசைதிருப்ப, தமிழகத்துக்கு கொடுக்கவேண்டிய பங்கை எப்பொழுது கொடுப்பீர்கள் என்று மத்திய அரசை கேட்பார் பாருங்கள், ஆடிப்போயிடுவீங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை