உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாக்கு மூட்டையில் பணம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா இடமாற்றம்

சாக்கு மூட்டையில் பணம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா இடமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழுவான கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்துடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.இதற்கிடையே, நீதிபதி வர்மாவுக்கு தற்போதைக்கு எந்த நீதித்துறைப் பணிகளையும் ஒதுக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதி கன்னா பரிந்துரைத்தார். இந்நிலையில், இன்று டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு நீதித்துறை பணிகள் தரக்கூடாது என்று உத்தரவிட்டார். இது குறித்து தலைமை நீதிபதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்திய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நீதித்துறைப் பணிகள் மறு உத்தரவு வரை திரும்ப பெறப்படுகின்றன'. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அவர் ஏற்கனவே பணியில் இருந்த அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. மார்ச் 20 மற்றும் மார்ச் 24 ஆகிய இரு நாட்கள் நடந்த கொலீஜியம் கூட்டங்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஆனால், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் எடுத்த முடிவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.நாளை 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Masco
மார் 28, 2025 16:03

இங்கு சாக்குமூட்டை இடமாற்றத்துக்கு பிறகு எரிக்க முடியாத மூட்டை இவ்வளவுதான் இவர்கள் நீதி


Raj
மார் 24, 2025 22:11

ஐ டி, அமலாக்க துறை விசாரணை நடத்தாதா? நீதிபதியும் சட்டத்திற்கு உட்பட்டவர்தானே. ஏன் இடமாறுதல் பதவி பறிப்பு விசாரணை நடத்தாதா


ஜெய்ஹிந்த்புரம்
மார் 26, 2025 08:29

இவாளுக்கெல்லாம் விசாரணை எல்லாம் கிடையாது


aaruthirumalai
மார் 24, 2025 21:52

சரியான தண்டனை வாழ்க வளர்க


K.n. Dhasarathan
மார் 24, 2025 21:31

கொலீஜியம் என்பது சரியான பாதையில் செல்ல வேண்டும், இட மாற்றம் என்பது என்ன ? அங்கும் சென்று பழைய செயல்களை தொடரவா ? அலகாபாத் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் செய்வது கொலீஜியம் அறியாதா ? வேட்கம் இல்லையா ?அல்லது அறிந்தும் இதுபோன்ற மென்மையாக நடக்கலாமா ? இதே ஒரு சாமான்யன் என்றால் எப்படி இருக்கும் ? சட்டத்தின் முன் அனைவரும் சமமா இல்லையா ? வர்மா எக்காரணம் கொண்டும் எங்கும் பணியில் தொடரக்கூடாது, புனிதன் என்று நிரூபிக்கட்டும், நீதி துறைக்கு மேலும் மேலும் அவமானம் செய்யாதீர்கள்.


spr
மார் 24, 2025 20:52

"டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது" இதுவரையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லையென்றார்கள் இவரைப் பதவி விலக்கம் செய்ய வேண்டும். அது குடியரசுத் தலைவரின் தார்மீகக் கடமை இல்லையேல் எல்லோரும் அக்கினி கடவுளிடம் தக்க தண்டனை தர விண்ணப்பம் செய்வதனைத் தவிர வேறு வழியில்லையோ


Sivakumar
மார் 24, 2025 18:57

பிஜேபி க்கு எதிரான என்னுடைய பல பதிவுகளை அப்படியே மாற்றி, கத்தரித்து நான் சொல்லும் கருத்துக்கு எதிர்மறையான அர்த்தம் வரும்வரை விஞ்ஞான மாற்றம் செய்தவர்களிடம் நேர்மை பத்தி பேசுறீங்க. பகவான் இருக்கிறான் பாத்துப்பார்.


Appa V
மார் 24, 2025 21:28

பகுத்தறிவு பகலவனின் பக்தரா ?


ஜெய்ஹிந்த்புரம்
மார் 25, 2025 00:31

அவாளுக்கு அது கைவந்த கலை....


மொட்டை தாசன்...
மார் 24, 2025 18:20

இதுவே சாமானியன் ஆயிரம் ஐநூறு லஞ்சம் வாங்கியிருந்தால் அவனை பணியிடை நீக்கம் செய்திருப்பார்கள் அல்லது ஐந்து வருட சிறை தண்டனை கிடைத்திருக்கும்.


Velan Iyengaar
மார் 24, 2025 18:12

இது ராமராஜ்ய ப்ராடக்ட் .... இப்படி தான் இருக்கும் ....ஹா ஹா ....இதுக்கு ஒண்ணுமே நடக்காது ..... தோண்ட தோண்ட புது புது பூதம் கிளம்பும் .... அதனால அப்படியே ஒரு கதை திரைக்கதை எழுதி முடிச்சிடுவாங்க ....


ஆரூர் ரங்
மார் 24, 2025 17:40

உ.பி மாநில அரசின் சிறப்பு வழக்கறிஞராக(சமாஜ்வாடிகட்சி) அகிலேஷ் யாதவால் நியமிக்கப்பட்டு பணிபுரிந்தார். அதிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக மாண்புமிகு கொலீஜியம் நியமித்து கவுரவித்தது.


Iyer
மார் 24, 2025 17:33

அதாவது இனிமேல் இவர் வீட்டில் இருந்து கொண்டே சம்பளம் வாங்கிக்கொண்டுஇருப்பர். HC அல்லது SC நீதிபதியை நீக்க இந்திய அரசியலமைப்பு ல் யாருக்கும் அதிகாரம் இல்லை. பாராளுமன்றம் IMPEACHMENT செய்தால்தான் வர்மா அவர்களை பதவியில் இருந்து நீக்கமுடியும். ஆகையால் அரசியலமைப்பை மாற்றி ஊழல் நீதிபதிகளை தண்டிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கவேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
மார் 26, 2025 08:27

மற்றதெல்லாம் எப்படி?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை