உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்திரசேகர ராவ் மகள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

சந்திரசேகர ராவ் மகள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

ஐதராபாத்: பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

பூசல்

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக காரணமாக இருந்தவர்களில், சந்திரசேகர ராவும் ஒருவர். 2001ல் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை துவங்கிய அவர், தெலுங்கானா உருவானதும், முதல்வராக 2014ல் பதவியேற்று, 2023 வரை பதவியில் நீடித்தார். தேசிய அரசியல் ஆசை ஏற்பட கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ர சமிதி என பெயர் மாற்றினார். அவருக்கு கேடி ராமாராவ் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். மகன் எம்எல்ஏ ஆக உள்ளார். மகள் எம்எல்சி ஆக உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s90xr5rf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநிலத்தில் ஆட்சி பறி போன பிறகு கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. சந்திரசேகர ராவ் - அவரது மகள் கவிதா இடையே மோதல் வெடித்தது. பிஆர்எஸ் கட்சியை பாஜ உடன் சேர்க்க முயற்சி நடப்பதாகவும் பேச்சுகள் கிளம்பின.

விமர்சனம்

இச்சூழ்நிலையில், கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து கவிதா பேச துவங்கினார். கட்சியின் தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். சந்திரசேகர ராவுக்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு கட்சி தலைவர் ஹரிஸ் ராவ் தான் காரணம் என்றார்.இந்நிலையில், கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.தெலுங்கானாவில் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்துள்ள நிலையில், கவிதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

சந்திரசேகர்
செப் 03, 2025 09:06

டெல்லி மதுபான ஊழல் கேஸில் ஜெயிலுக்கு போன இவர்.அந்த கேஸில் விடுதலை ஆகி விட்டாரா என்ன?


eaj
செப் 03, 2025 08:25

அங்கே ஒரு குட்டி கட்டு மர குடும்பம். ஆனால் கொள்ளை அடிப்பதில் கட்டுமரம் போல இல்லை. திறமை குறைவு தான்


Kulandai kannan
செப் 02, 2025 19:38

குடும்ப வாரிசு அரசியல் நாட்டுக்குக் கேடு.


திகழ்ஓவியன்
செப் 02, 2025 19:07

என்ன பிஜேபியில் சேர உள்ளார் வேறு வழியில்லை...மது பண கொள்கை வழக்கு இருக்கே


அயோக்கிய திருட்டு திராவிடன்
செப் 02, 2025 17:19

இங்குள்ள திருட்டு திராவிட அயோக்கிய குடும்பக் கட்சியும் ஒரு நாள் பி ஆர் எஸ் க்கு நேர்ந்த நிலைமை கண்டிப்பாக நேரும். அந்த நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அது எப்படியாவது நடந்தே தீரும் இது உறுதி.


Abdul Rahim
செப் 02, 2025 16:48

காலேஸ்வராம் அணைக்கட்டியதில் தந்தையின் மீது ஊழல் புகார் ,டெல்லி மதுபான டெண்டரில் மகளின் மீது ஊழல் புகார் இந்த நிலையில் மகளை கட்சியை விட்டு நீக்கி பாஜகவை நோக்கி போக செய்து ரகசிய திட்டம் அங்கு சென்று மகள் பேச வேண்டியவர்களிடம் பேசி அப்பாவையும் தன்னையும் விடுவித்துக்கொள்வார் அதற்க்கு ஈடாக தெலுங்கானாவில் பாஜகவிற்கு தொல்லை குடுக்க கூடாது ,


HoneyBee
செப் 02, 2025 16:14

திராவிட மாடல் வழியில் மடை மாற்றம் செய்யப்பட்டது... அம்புட்டு தான்...


theruvasagan
செப் 02, 2025 16:04

குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் இப்படி சிதைந்தால் நாட்டுக்கு நல்லது. நல்லதே நடக்கட்டும்.


V Venkatachalam
செப் 02, 2025 16:02

கிரேட் நியூஸ். அன்பு மணி - ராமதாஸ் அடி புடி சண்டை. அதை தொடர்ந்து சி எஸ் ஆர் - கவிதா தள்ளுபுடி சண்டை. நெக்ஸ்ட்?


Indhuindian
செப் 02, 2025 15:53

குடும்பத்துலே வெட்டு குத்து இங்கே அப்பா பையன் அங்கே அப்பா பொண்ணு வாழ்க வாரிசு அரசியல்


புதிய வீடியோ