கலபுரகியிலும் பிரசவ மரணம்; டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு
கலபுரகி; பல்லாரி, பெலகாவியை தொடர்ந்து கலபுரகியிலும் பிரசவித்துக்குப் பின் பெண் மரணமடைந்தார். டாக்டர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.பல்லாரி மாவட்ட மருத்துவமனையில் கடந்த நவம்பரில், பிரசவித்த பெண்கள் தொடர்ந்து உயிரிழந்தனர். இச்சம்பவம் அரசு மருத்துவமனைக்கு செல்ல, மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. முதல்கட்ட விசாரணையில், 'பிரசவித்த பெண்களுக்கு செலுத்தப்பட்ட ஐ.வி., குளுகோஸ் தரமற்றது என்பது தெரியவந்தது.இந்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், கலபுரகி மாவட்டம், அப்சல்புராவின் ஹவலகா கிராமத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ சிவாஜி, 22, பிரசவத்திற்காக தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பாக்யஸ்ரீயின் ரத்த அழுத்தம் திடீரென குறைந்தது. உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று மதியம் உயிரிழந்தார். டாக்டர்களின் அலட்சியத்தால் பாக்யஸ்ரீ உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.