உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு வழியா பிரச்னை முடிஞ்சிருச்சு! விரைவில் படம் ரிலீஸ் ஆகும்; கங்கனா தந்த அப்டேட்

ஒரு வழியா பிரச்னை முடிஞ்சிருச்சு! விரைவில் படம் ரிலீஸ் ஆகும்; கங்கனா தந்த அப்டேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எமர்ஜென்சி படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என நடிகை கங்கனா ரனாவத் அறிவித்தார்.முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்திய போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வரலாற்றை மையமாக கொண்டு எமர்ஜென்சி என்ற பெயரில் படத்தை தயாரித்து, பிரபல நடிகை கங்கனா ரனாவத் இயக்கி உள்ளார். செப்டம்பர் 6ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி என்று அறிவிக்கப்பட்டது. படத்தில் சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரித்ததாக பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், சீக்கிய அமைப்பினர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய தணிக்கை குழு படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தணிக்கை குழு சார்பில் ஆஜரான வக்கீல், 'எமர்ஜென்சி' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதால் படத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என தெரிவித்து இருந்தார். வேறு வழியின்றி ஏற்றுக் கொண்ட நடிகை கங்கனாவும் அதை ஏற்றுக் கொண்டார். சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன. இந்நிலையில், எமர்ஜென்சி படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது என கங்கனா தெரிவித்து உள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' எமர்ஜென்சி படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். உங்கள் பொறுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 18, 2024 14:51

திருமதி. இந்திரா காந்தி தேர்தல் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு கொடுத்த நீதிபதி தனது தீர்ப்பினை தட்டச்சு செய்து கொடுத்த உதவியாளரை தீர்ப்பு சொல்லும் தேதிக்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே தட்டச்சு செய்து வாங்கி வைத்துக் கொண்டு, உதவியாளரை எங்காவது சென்று குடும்பத்துடன் தலைமறைவு ஆகச் சொல்லி அதற்கு இரண்டு நாள் நேரம் தந்து பின்னர் தான் தீர்ப்பு வழங்கினார். இதிலிருந்தே இந்திரா காந்தி அப்போது அவருடன் இருந்த அவரது அரசியல் பணிகளை கவனித்து மகன் சஞ்சய் காந்தி எவ்வளவு கொடுராமானவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சஞ்சய் காந்தி விமான விபத்தே இந்திரா திட்டம் மிட்ட விபத்து என்று அப்போதே பேசிக்கொண்டனர்.


Ramesh Sargam
அக் 18, 2024 12:45

இந்திராவை எப்படி சித்தரித்துள்ளார்கள் என்று தெரிந்துகொள்ள காங்கிரஸ் கட்சியினரும் மிக ஆவலில் படம் பார்ப்பார்கள். காங்கிரஸ் கட்சியின் எதிர் கட்சியினர், குறிப்பாக இந்தியாவின் எதிரிகள் அவர் எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அவர்களும் படம் பார்ப்பார்கள்.


raju
அக் 18, 2024 09:09

போட்டோ மற்றும் படங்களுக்கு மரியாதையை கொடுக்கும் சமுதாயம் நாம். இரும்பு மனுஷி இந்திரா இடத்தில் இந்த ..ஏன்டா உங்களுக்கு தேச பக்தியெ கிடையாதா? இதில் ஆளும் கட்சியின் அராஜகம்


ஆரூர் ரங்
அக் 18, 2024 11:07

யார் இரும்பு மனிதி? அரசியல் சுய நலனுக்காக அவசர நிலை பிரகடனம் செய்து லட்சம் அப்பாவிகளை சிறையில் தள்ளி இன்பம் கண்டவரா?? எத்தனை குடும்பங்கள் தலைவனை இழந்து நடுத்தெருவில் நின்றன தெரியுமா? பெண் ஹிட்லர், அரக்கி என்றெல்லாம் உங்க கருணாநிதி வர்ணித்தார்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 18, 2024 14:43

தேர்தலில் திரு.ராஜ் நாராயணன் இடம் தோற்ற தோல்வியை ஏற்க மறுத்து சஞ்சய் காந்தி சொல் பேச்சு கேட்டு எமெர்ஜென்சி கொண்டு வந்து நாட்டில் உள்ள மக்கள் வதைத்து பொசுக்கிய இந்திரா காந்தியா இரும்பு மனுசி. இதைவிட வெட்க கேடான புகழ்ச்சி உலகில் வேறெதுவும் இல்லை. தன்னை பிரதமர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்த காமராஜரையே வீட்டு சிறையில் வைத்து காந்தி பிறந்த அக்டோபர் 2ல் மரணிக்க செய்து காமராஜர் பிறந்தநாள் நினைவு நாளையே மக்கள் மனதில் இருந்து நீக்கினார் இந்திரா காந்தி.


சிவம்
அக் 18, 2024 08:57

சீக்கியர்களை இழிவு படுத்தும் விதமாக இருக்கிறது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இப்போது ராகுல் காந்தியிடம் நட்பு பாராட்டுவது எப்படி. இப்போதுள்ள சீக்கியர்கள் தங்கள் அப்பா தாத்தாக்களை கேட்டுப் பாருங்கள். இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்த போது டில்லியில் அவர்கள் என்ன பாடுபட்டார்கள் என்று தெரியும்.