உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காந்தாரா பட நடிகர் திடீர் மரணம்; திருமண நிகழ்வில் சோகம்

காந்தாரா பட நடிகர் திடீர் மரணம்; திருமண நிகழ்வில் சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கார்கலா; திருமண விழாவின் போது பிரபல கன்னட நடிகர் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கன்னட திரையுலகின் பிரபல நடிகர் ராகேஷ் புஜாரி(33). காமெடி கிலாடி சீசன் 3 ஷோவின் வெற்றியாளர். காந்தாரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். காந்தாரா படத்தின் 2ம் பாகத்திலும் தற்போது நடித்து வருகிறார். உடுப்பியில் திருமண விழா ஒன்றில் ராகேஷ் புஜாரி கலந்து கொண்டிருந்தார். விழாவில் தமது நண்பர்களுடன் அவர் மேடையில் உற்சாகம் பொங்க, நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நெஞ்சை பிடித்தபடியே சரிந்து விழுந்தார்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்குள்ளோர் ராகேஷை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறினர். ராகேஷ் புஜாரியின் மறைவை அறிந்த கன்னட சினிமா பிரபலங்கள் அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rathna
மே 12, 2025 18:28

போதை பொருட்கள் உபயோகம், உடல் உழைப்பு இன்மை, அதிக அளவு மாமிசம் மற்றும் குடி மார்பு அடைப்பை உண்டாக்குகிறது.


மீனவ நண்பன்
மே 12, 2025 19:57

ஜோசியரா நீங்க ..


Apposthalan samlin
மே 12, 2025 17:33

இந்த ஊசியால் காலையில் 5 km மாலையில் 5km வாக்கிங் ஜாக்கிங் போறதினால் நான் உயிரோடு இருக்கிறேன் .நீங்கள் excersize செய்யாவிட்டால் சாவீர்கள் இல்லை என்றால் சைடு effect கண்டிப்பா வரும்


மீனவ நண்பன்
மே 12, 2025 19:56

எந்த ஊசியில் ?


Kamaraj TA
மே 12, 2025 17:10

ஊசி யாரையும் போட்டுக் கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லையே. போடாமல் விட்டு விடலாமே? சரி................. நீங்கள் ஊசி போட்டுக் கொண்டீர்களா?


Sudarsan Ragavendran
மே 12, 2025 17:28

rubbish... i took vaccine for COVID and i have attended so many functions and danced well


Apposthalan samlin
மே 12, 2025 16:17

காரோண வருவதற்கு முன்னால் ஒருத்தரும் இப்படி ஆடும் பொழுது சாகவில்லை காரோண ஊசி போட்ட பின்னர் தான் அதிக உயிர் இலப்பு .


ram
மே 12, 2025 17:08

நீ உயிரோடுதான் இருக்க


shyamnats
மே 12, 2025 18:01

முன்னேறிய என்று சொல்லும் நாடுகளில் கூட , இத்தகைய தடுப்பூசி இல்லாமல் இறந்தவர்கள் சதவிகிதம் மிக அதிகம். ஆதாரமில்லாமல், சமூக பொறுப்பில்லாமல் கண்டபடி விமரிசனம் செய்யாதீர்கள்.


சமீபத்திய செய்தி