வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்ன பேசி என்ன பயன் எல்லாம் ஒரு வட்டள் நாகூராஜு பெயரை கேட்டால் ஆளுக்கு ஒரு புறம் ஒடி விடுகிறார்கள்
பெங்களூரு : கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாட்டிற்கு, பெங்களூரு தமிழ் சங்க இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.தமிழ் ஆர்வலர் எஸ்.டி.குமார் தலைமையில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் வரும் 20ம் தேதி கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு நடக்கிறது.இதுகுறித்து, பெங்களூரு தமிழ் சங்க முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் நேற்று முன்தினம் கலந்துரையாடல் நடத்தினர். பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், முன்னாள் செயலர் ஸ்ரீதரன், முன்னாள் துணை செயலர் எம்.ஜி.ஆர்., ரவி, சங்கத்தின் தற்போதைய துணை செயலர்கள் கோபிநாத், பாரி, செயற்குழு உறுப்பினர்கள் லயன் பத்மநாபன், சங்கரன், விஜயலட்சுமி, தேசிய கட்டிட சங்க தலைவர் வெள்ளைத்துரை, அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் பேரவை தலைவர் ஐ.ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.தமிழ் சங்க முன்னாள் பொருளாளர் ராதை மணாளன் குழுவினரும் மாநாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.கூட்டத்தில், மாநாட்டில் பங்கேற்று, வெற்றி பெற செய்வோம் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், கர்நாடக வாழ் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள், குடும்பம், குடும்பமாக திரளாக வந்து ஒற்றுமையை காண்பிக்கும்படியும் அழைப்பு விடுத்துள்ளனர்.இதற்கிடையில், துணை முதல்வர் சிவகுமாரை, எஸ்.டி.குமார் சந்தித்து, மாநாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அவரும் கண்டிப்பாக வருவதாக உறுதி அளித்துள்ளார்.
என்ன பேசி என்ன பயன் எல்லாம் ஒரு வட்டள் நாகூராஜு பெயரை கேட்டால் ஆளுக்கு ஒரு புறம் ஒடி விடுகிறார்கள்