உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசாருக்கு பயந்து பரணில் ஒளிந்த சமாஜ்வாதி மாஜி எம்பி கைது: வீடியோ வைரல்

போலீசாருக்கு பயந்து பரணில் ஒளிந்த சமாஜ்வாதி மாஜி எம்பி கைது: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னோஜ்; உ.பி.யில் வீட்டின் பரண் மேல் பதுங்கிய சமாஜ்வாதி முன்னாள் எம்பியை போலீசார் கைது செய்த வீடியோ வைரலாகி இருக்கிறது.இதுபற்றிய விவரம் வருமாறு;https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wwzhnks8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உ.பி. மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் சமாஜ்வாதி தலைவர் கைஷ்கான். கட்சியின் பொருளாளராக இருக்கும் இவர் முன்னாள் எம்பியும் கூட. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர். நில அபகரிப்பு உள்ளிட்ட 5 கிரிமினல் வழக்குகள் கைஷ்கான் மீது உள்ளன. அதன் காரணமாக அவர் கடந்த ஜூலை 28 முதல் 6 மாதங்களுக்கு கன்னோஜ் மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது நீதிமன்றம் தடை விதித்துள்ளது.ஆனால் தடையை மீறி கைஷ்கான் தனது வீட்டில் இருக்கும் விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனடியாக பெரும் படையுடன் அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் கைஷ்கான் அங்கு இருக்கிறாரா என்று சோதனை நடத்தினர்.போலீசாரின் வருகையை எப்படியோ மோப்பம் பிடித்த மிகவும் புத்திசாலித்தனமாக யோசிப்பதாக நினைத்துக் கொண்டு வீட்டினுள் இருக்கும் பரணில் ஏறி ஒளிந்து கொண்டார். வீடு முழுக்க தேடிய போலீசாருக்கு பரண் மீது பச்சை துணி போர்த்தப்பட்டு இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.உடனடியாக அந்த துணியை விலக்கி பார்த்த போது, கைஷ்கான் அங்கு ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டனர். உடனடியாக அவரை கீழே இறக்கி கைது செய்தனர். அதன் பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை கடுமையாக எச்சரித்து நிபந்தனை ஜாமினில் நீதிமன்றம் விடுவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Tamilan
செப் 05, 2025 21:41

வட மாநிலங்கள் பல வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, டெல்லி தொடர்ந்து பலநாட்களாக அபாய அளவுக்கும் 6 அடி அதிகமாக மூழ்கிக்கொண்டிருக்கும்போதும் முதல்வரும், பிரதமரும் மத்திய மாநில அமைச்சர்களும் எங்கு போயிருக்கிறார்கள் ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 06, 2025 07:08

குண்டு வைத்து ஒரு கோடி மக்களை கொல்வோம் என்று மிரட்டும் நல்ல உள்ளங்களை தேடிக் கொண்டு உள்ளார்கள். எதற்கும் அவர்களை பதுங்கு குழிக்குள் ஓடச் சொல்லவும்


சந்திரன்
செப் 06, 2025 08:39

சென்னை வெள்ளத்தில் உணவுகூட இல்லாமல் மக்கள் தவித்த போது எங்கப்பா போனாரு.


Rathna
செப் 05, 2025 20:43

ஜிஹாதிகள் கூட்டணி. கலவரம், மக்கள் சொத்துக்களை அபகரிப்பது, அப்பாவிகளை கொல்வது இவங்களுக்கு கை வந்த கலை.


raja
செப் 05, 2025 19:16

உபி போலீஸ் திறமைசாலிகள் கண்டுபிடித்து விட்டார்கள்...ஆனால் நமது ஸ்காட்லாந்து யார்டு க்கு நிகர் என்று பெருமை பீத்திகொள்ளும் தமிழக ஒன்கொள் கோவால் புற ஏவல் துறை அணில் பாலாஜியின் தம்பியை, வேங்கைவயல் குற்றவாளியை, ராமஜெயம் கொலையாளியை, வருடகணக்காய் தேடிக்கொண்டு இருக்காங்க...


வாய்மையே வெல்லும்
செப் 05, 2025 19:01

சுத்த காமெடி பீசு .. இதே ராவுலாக இருந்தால் இரண்டாவது குடியுரிமையை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிப்போயிருப்பர். உங்களை போல அலைஸ் பாய்ஸ்... அதாங்க போலீஸ் திருடன் சிரிப்பு விளையாட்டெல்லாம் நடந்தேறி இருக்காது.. onepoint ..நீங்க முன்னாள் எம் பி யா ? அந்த பதவிக்கே பங்கம் வரவழைத்து விட்டீர்கள் . ஆக ஒன்று நிச்சயம் அநேக எம்பிக்களெல்லாம் உள்ளூர் திருடர்கள்.. இந்திய வல்லரசு நாட்டில் இப்படியும் கூத்து நடப்பது வெட்கக்கேடு


Sridharan Pt
செப் 05, 2025 17:59

Sridharan Pt


Artist
செப் 05, 2025 18:42

உமக்கு என்ன பிரச்னை ?


vee srikanth
செப் 05, 2025 17:57

எங்க ஆளுங்க ஜெயில்ல இருக்கும்போது ஷாப்பிங் போனவங்க - அண்ணன் ஜெயிலில் இருக்கும்போது தம்பிய கண்டுபிடிக்க முடியல - இதெல்லாம் ஜுஜுபி


Artist
செப் 05, 2025 17:33

அதுக்கும் பச்சை தானா ?


Raghavan
செப் 05, 2025 16:43

எதற்கு எச்சரிக்கணும். தூக்கி உள்ள போட்டா எல்லாம் சரியாகிவிடும். மறுபடியும் எதற்கு நிபந்தனை ஜாமீன். எப்போது ஜாமீன் நிபந்தனை மீறி அந்த ஊருக்குள் சென்றாரோ அதற்க்கு ஒரு வழக்கைப் போட்டு உள்ள தள்ள வேண்டியதுதானே.


V Venkatachalam
செப் 05, 2025 21:20

இந்தியா வில் லஞ்ச லாவண்யம் பெருகவும் அதை வியாபாரியாக மாற்றவும் லஞ்சம் இல்லை யென்றால் ஸ்டேட்டஸ் இல்லை என்று ஆனதற்கும் கோர்ட்டுகளே காரணம். அக்னி தேவதைக்கே இந்த கண்ணாமூச்சி ஆட்டம் பொறுக்க முடியாமத்தான் நீதிபதி வர்மா வீட்டில் புகுந்தாள். இந்த நிகழ்வுக்கு பின்னரும் கேடு கெட்ட ஜென்மங்கள் திருந்துகிற மாதிரி தெரியலை.


முக்கிய வீடியோ