உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெர்மனி கிரிக்கெட்டில்  அசத்தும் கர்நாடக பெண் 

ஜெர்மனி கிரிக்கெட்டில்  அசத்தும் கர்நாடக பெண் 

கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்தவர் அனுராதா தொட்டபல்லாபூர், 38. ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தில் இதயம் மற்றும் நுரையீரல் ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளார். ஜெர்மனி பெண்கள் கிரிக்கெட்டின் அணியின் கேப்டனாக அசத்தி வருகிறார். இவரது கிரிக்கெட் பயணம் பற்றி பார்க்கலாம்.குழந்தை பருவ தோழன் ஒருவர் மூலம், கிரிக்கெட் விளையாட்டின் மீது அனுராதாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் 1998ல், 12 வயதில் கர்நாடக பெண்கள் விளையாட்டு வீராங்கனைகள் சங்கம் நடத்திய பயிற்சி குழுவில் இணைந்தார். அந்த குழுவில் சிறப்பாக விளையாடியதால் கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு தேர்வு ஆனார்.கடந்த 2008ல், 'மருத்துவ மரபியல் முதுகலை பட்டம்' படிக்க இங்கிலாந்து சென்றார். அங்கு கவுண்டி அணிகளில் விளையாடினார். பின், 2011ல் உயிரியலில் பி.எச்.டி., படிக்க ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தார்.அங்கு உள்ள பயிற்சி முகாம்களில் சிறப்பாக விளையாடிதால், கடந்த 2015ல் ஜெர்மன் மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது. பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தக்கூடிய அனுராதா, கடந்த 2020ல் ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.இந்த சாதனை படைத்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெயரும் கிடைத்தது. கடந்த 2021ல் அணியின் கேப்டன் ஆனார். அணியின் வெற்றிக்கு எப்போதும் உறுதுணையாக உள்ளார். இரண்டு கண்கள் போல பி.எச்.டி., படிப்பையும், கிரிக்கெட்டையும் நினைக்கிறார். -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !