உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் சோகம்: பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் சோகம்: பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று இரவு லாரி ஒன்று விநாயகர் ஊர்வலத்திற்குள் புகுந்தது. ஒரு பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர்மீடியனில் மோதி, விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் கூட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர், போலீசார் விரைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sq9lz9lk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் சித்தராமையா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். விபத்து தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Oviya Vijay
செப் 13, 2025 14:19

இவற்றில் உயிரிழந்தவர்களை நினைத்து பரிதாபம் கொள்வதா... இல்லை... கர்நாடக மாங்கா மடையர்களை நினைத்து சினம் கொள்வதா என்றே புரியவில்லை... ஒருவருக்கு இன்றைய தினம் பிறந்தநாள் என்றால் இன்று கொண்டாடலாம்... அதிகபட்சம் அடுத்த நாள்... அவ்வளவே... இன்று பிறந்தநாள் வைத்துக்கொண்டு பதினைந்து இருபது நாட்கள் கழித்து கொண்டாடிக் கொண்டிருந்தால் என்னய்யா அர்த்தம்... விநாயகர் சதுர்த்தி முடிந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகி விட்டது... ஆனால் இன்னமும் கர்நாடகாவில் ஆங்காங்கே பிள்ளையார் சிலைகள் வைத்து கொண்டாடிக் கொண்டுள்ளனர் என அங்கிருக்கும் நண்பர்கள் மூலமாக அறிய முடிகிறது... ஆளானுப்பட்ட மும்பைக்காரர்களே ஒரு வாரம் தாண்ட மாட்டார்கள்... நம் தமிழகமும் அவ்வாறே... ஆனால் இந்த கர்நாடகத்தில் மட்டும் வேலை வெட்டி எதுவுமில்லாமல் மாதக்கணக்கில் மக்களே வெறுத்துப் போகுமளவிற்கு வெறுப்பேற்றிக் கொண்டுள்ளனர்... உடனே நான் இந்து பண்டிகையைப் பற்றி மட்டும் சொல்வதாக ஒரு குரூப் கிளம்பி வரும்... அது கிறிஸ்தவர்களாகட்டும் இஸ்லாமியர்களாகட்டும் எந்த மதத்தவர்களாகட்டும் இந்த மாதிரி கோடிக்கணக்கான ரூபாயை தெருவில் வீணாக செலவு செய்வதைத் தவிர்த்து அருகில் உள்ள பார்வையற்றோர் இல்லங்களுக்கோ, முதியோர் இல்லங்களுக்கோ மக்களிடம் வசூல் செய்யும் பணத்தைக் கொடுத்து உதவுங்கள்... ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பணத்தை இவ்வில்லங்கள் பெருமாயின் பெருமளவில் பார்வையற்ற மாணவர்களுக்கும் முதியவர்களுக்கும் மிக மிக உதவியாக இருக்கும்... தற்போதைய நிலையில் இவ்வாறான இல்லங்கள் பொருளுதவிகள் பெற மிகுந்த அளவில் போராடிக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை...


muthu
செப் 13, 2025 11:05

கண்டிப்பாக தீவிரவாத தாக்குதலாகத்தான் இருக்கும். NIA விசாரிக்க வேண்டும்.


nisar ahmad
செப் 13, 2025 10:35

விநாயகர் ஊர்வம் என்கிற பெயரில் லாரிகாரனை மறித்து லந்து பண்ணியிருப்பாங்க


Rajasekar Jayaraman
செப் 13, 2025 09:37

இது மத வெறுப்புக்காக செய்யப்படும் விபத்துக்களோ சந்தேகமாக இருக்கிறது.


nisar ahmad
செப் 13, 2025 10:28

நீங்கள் நினைத்தால் நல்லது


Suresh sridharan
செப் 13, 2025 08:56

ஒன்று மொபைல் பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது இன்னொன்று மத சம்பந்த ப்பட்டதாக இருக்கும் அதில் சந்தேகம் இல்லை


Sun
செப் 13, 2025 08:27

உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வழக்கமான தன்னோட சித்து விளையாட்டை காட்டாமல் சம்பவம் குறித்து தீர விசாரணை செய்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.


முக்கிய வீடியோ