வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த நிறுத்த பட்ட லாரிகள் பற்றி விசாரணை வேண்டும். முதல் அறிக்கை யாக மோதிய வாகன ஓட்டி குடித்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுத்தால் பல உயிர்கள் காப்பாற்ற படும்
பெங்களூரு: கர்நாடகாவில் கலபுரகியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் காயமடைந்தனர்.கர்நாடகாவில் கலபுரகி மாவட்டத்தில் உள்ள நெலோகி கிராஸ் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. வேனில் 31 பேர் தர்காவிற்கு சென்று கொண்டிருந்த போது, இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் வாஜீத், மெகபூபி, பிரியங்கா, மெகபூப் என 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் யார் என அடையாளம் காணும் போலீஸ் இறங்கி உள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் கலபுரகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலபுரகி எஸ்.பி., சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு நிலைமையை விசாரித்தார். இறந்தவர்கள் பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்த நிறுத்த பட்ட லாரிகள் பற்றி விசாரணை வேண்டும். முதல் அறிக்கை யாக மோதிய வாகன ஓட்டி குடித்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுத்தால் பல உயிர்கள் காப்பாற்ற படும்