உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானி குழுமத்தை தடுத்தார் கெஜ்ரிவால்

அதானி குழுமத்தை தடுத்தார் கெஜ்ரிவால்

விக்ரம் நகர்:“டில்லி மின்துறையில் நுழைய முயன்ற அதானி குழுமத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தினார்,” என, ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் கூறினார்.சோலார் எனப்படும் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களில் தங்களுக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க ஆந்திரா உள்பட பல மாநில அரசு அதிகாரிகளுக்கு, 2,100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த விவகாரம் நேற்று நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரான சஞ்சய் சிங் கூறியதாவது:அமெரிக்க வழக்கு தொடர்பாக கவுதம் அதானி விளக்கம் அளிக்க வேண்டும். குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நெறிமுறையற்ற வழிகளில் மின் வினியோக ஒப்பந்தங்களை அதானி க்ரீன் எனர்ஜி பெற்றது.டில்லியில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்தால், மக்களின் மின்சார செலவுகள் உயரக்கூடும்.டில்லியின் மின் துறையில் அதானி குழுமம் நுழைய முயன்றதை அப்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தினார். நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், வரவிருக்கும் பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் இந்த விஷயத்தை முழு சக்தியுடன் எழுப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ