முதல்வர் பங்களாவை காலி செய்தார் கெஜ்ரிவால்
புதுடில்லி:அரசு பங்களாவை நேற்று காலி செய்த முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மனைவி மற்று தாய் - தந்தையுடன் லுடியன்ஸ் டில்லியில் உள்ள பங்களாவில் குடியேறினார்.ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, உச்ச நீதிமன்ற ஜாமினி இருக்கிறார்.இந்நிலையில், முதல்வருக்கான அரசு பங்களாவை நேற்று காலி செய்தார். மனைவி சுனிதா, மகன், மகள் மற்றும் தாய் - தந்தையுடன் நேற்று, மண்டி ஹவுஸ் அருகே எண்: 5 பெரோஸ்ஷா சாலையில் உள்ள பங்களாவில் குடியேறினார்.இந்த பங்களா பஞ்சாப் மாநில ராஜ்யசபா எம்.பி.,யான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மிட்டலுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டில்லி சட்டசபைத் தேர்தலில் டில்லி மக்கள் ஆட்சிப் பொறுப்பை ஆம் ஆத்மிக்கே மீண்டும் ஒப்படைத்தால் மட்டுமே முதல்வர் பதவியை ஏற்பேன் என கெஜ்ரிவால் சபதம் செய்துள்ளார்.