கெஜ்ரிவால் மகள் திருமணம் உடன் படித்தவரை மணந்தார்
புதுடில்லி:முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் திருமணம் நேற்று முன் தினம் நடந்தது.அரவிந்த் கெஜ்ரிவால் - சுனிதா தம்பதிக்கு ஹர்ஷிதா என்ற மகளும் புல்கித் கெஜ்ரிவால் என்ற மகனும் உள்ளனர்.ஹர்ஷிதா டில்லி ஐ.ஐ.டி.,யில் 'கெமிக்கல் இன்ஜினியரிங்' படித்த போது தன்னுடன் படித்த சம்பவ் ஜெயின் என்பவரை காதலித்தார். படிப்பை முடித்தவுடன் இருவரும் சேர்ந்து, 'பாசில் ஹெல்த்' என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் துவங்கினர். சம்பவ் தற்போது, தனியார் நிறுவனம் ஒன்றில் திட்ட ஆலோசகராக பணிபுரிகிறார்.இரு குடும்பத்தினர் சம்மதத்துடன், லுடியன்ஸ் டில்லியில் கபுர்தாலா ஹவுசில் சம்பவ் _ ஹர்ஷிதா திருமணம் நேற்று முன் தினம் நடந்தது.பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் கோபால் ராய், ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், பிரபல பாலிவுட் பாடகர் மிகா சிங் உட்பட ஏரளமானோர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியி இன்று நடக்கிறது. அரவிந்த் ஆட்டம்
அல்லு அர்ஜுர் ஜுன் நடிப்பில் பல மொழிகளில் வெளியான புஷ்பா சினிமாவில் இடம் பெற்றுள்ள பிரபல பாடலுக்குக் அரவிந்த் கெஜ்ரிவால் தன் மனைவி சுனிதாவுடன் இணைந்து நடனம் ஆடினார். அதைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் தன் மனைவியுடன் இணைந்து ஹிந்தி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினார்.