உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடிமாலியில் நிலச்சரிவில் இடிந்தது வீடு; 7 மணி நேர மீட்பு பணியில் கணவர் பலி, மனைவி உயிருக்கு போராட்டம்

அடிமாலியில் நிலச்சரிவில் இடிந்தது வீடு; 7 மணி நேர மீட்பு பணியில் கணவர் பலி, மனைவி உயிருக்கு போராட்டம்

இடுக்கி; அடிமாலியில் பலத்த மழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தம்பதியரில் ஒருவர் 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டார். அவரின் கணவர் உயிரிழந்தார்.கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு என பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்த வண்ணம் இருந்துள்ளது. அங்குள்ள அடிமாலியில் கனமழையின் போது நிலச்சரிவு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த வீடு ஒன்று நேற்றிரவு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த கணவன் பிஜூ, மனைவி சந்தியா ஆகியோர் உள்ளே சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். கொட்டும் மழையில் அவர்கள் மீட்பு பணியில் இறங்கினர். ஜேசிபி இயந்திரங்கள் வரவைழக்கப்பட்டு, இடிபாடுகள் அகற்றும் நடவடிக்கை தொடங்கியது. பிஜூவும், அவரது மனைவி சந்தியாவும் படுக்கைக்கும், அலமாரிக்கும் இடையே சிக்கிக் கொண்டதால் அவர்களை மீட்பதில் பெரும் சிக்கல் எழுந்தது. கிட்டத்தட்ட 7 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் மீட்டனர்.படுகாயம் அடைந்த அவர்களை மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிஜூ சிகிச்சை பலனின்றி இறந்துவிட, அவரின் மனைவி சந்தியாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையோரம் சாலை விரிவாக்கத் திட்ட பணிகளுக்கு பிஜூ வீட்டின் அருகே இருந்த பெரிய பாறை ஒன்று இடிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட நிலச்சரிவே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். இந்த சம்வத்திற்கு முன்னதாக, அருகில் உள்ள 22 குடும்பங்கள் சரியான நேரத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி