வனப்பகுதி சாலையில் பைக் ரைடிங்: கேரள கல்லுாரி மாணவி பலி
கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் வனப்பகுதி சாலையில் பைக் ரைடிங் சென்ற கல்லுாரி மாணவி விபத்தில் பலியானார்.கேரள மாநிலம் கொச்சியில் நாகரம்பரா வன அலுவலகம் உள்ளது. அதனருகில் செம்பங்குழி பகுதியில் நேற்று திருச்சூரை சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவி, ஆனி மேரி, 21, உடன் படிக்கும் மாணவர் அல்தாப் அபூபக்கர் உடன் பைக் ரைடிங் சென்றுள்ளார். அப்போது சாலையில் கிடந்த மரக்கிளைகள் மீது பைக் கடந்தபோது, பைக் பின்னால் அமர்ந்திருந்த மேரி,நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். பைக் ஓட்டிய அல்தாப் படுகாயம் அடைந்தார்.சம்பவம் குறித்து வன அதிகாரிகள் கூறுகையில், சம்பவம் நடந்த வனப்பகுதி சாலையில் அடிக்கடி காட்டு யானைகள் உலா வரும் பகுதியாகும். யானைகள் வரும் வழியில் மரங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால், யானைகள் மரக்கிளைகளை ஒடித்து விடும் அது சாலைகளில் கிடந்ததால் அப்பகுதியில் பைக்கில் வந்த கல்லுாி மாணவர்கள் நிலை தடுமாறி விழுந்தனர். பைக் ஓட்டி வந்த அல்தாப் படுகாயங்களுடன் கொத்தமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வனப்பகுதியாக உள்ளதால் இச்சாலையில் போக்குவரத்தில் மிக கவனமாக செல்ல வேண்டும்.இவ்வாறு வன அதிகாரிகள் கூறினர்.