உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு தேர்தல் முடிவை எதிர்த்து பா.ஜ., வழக்கு: பிரியங்காவுக்கு கேரள ஐகோர்ட் நோட்டீஸ்

வயநாடு தேர்தல் முடிவை எதிர்த்து பா.ஜ., வழக்கு: பிரியங்காவுக்கு கேரள ஐகோர்ட் நோட்டீஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்காவுக்கு கேரள ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல், இரண்டிலும் வெற்றி பெற்றார். தொடர்ந்து வயநாடு தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு 2024 நவ.,13ல் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அவரின் சகோதரி பிரியங்காவும், பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாசும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பிரியங்கா 6,22, 338 ஓட்டுகள் பெற்று சுமார் 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ஜ., வேட்பாளர் 1,09,939 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.இதன் பிறகு, நவ்யா ஹரிதாஸ் கேரள ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், '' குடும்பத்தினர் மற்றும் தனது சொத்துகள் குறித்த பல்வேறு முக்கிய தகவல்களை வேட்புமனுவில் பிரியங்கா மறைத்துவிட்டார். வாக்காளர்களிடம் செல்வாக்கும் செலுத்தும் நோக்கத்தில் அவர்களை தவறாக வழிநடத்தியதுடன், தவறான தகவலை தெரிவித்து உள்ளார். எனவே பிரியங்காவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்,'' எனத் தெரிவித்து இருந்தார்.இதனை விசாரித்த நீதிபதி பாபு, இந்த மனு குறித்து பதிலளிக்கும்படி பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஆக.,11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஜூன் 12, 2025 04:14

மதத்தை வைத்து சிறுபான்மையினருக்கு மட்டும் அரசியல் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.. பெரும்பான்மையினர் மதச்சார்பற்றவர்களாக இருக்கவேண்டும் - இதுதான் காங்கிரஸ்கழகத்தின் கோட்பாடு.


Shankar
ஜூன் 12, 2025 00:19

இந்த வழக்கு அநேகமாக அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முடிந்துவிடும் என்று நம்புவோம்.


மனிதன்
ஜூன் 11, 2025 22:52

உண்மையா வழக்கு போடுவதாக இருந்தால் வாரணாசியில நம்ம தலக்கு எதிராகத்தான் வழக்கு போடணும்.., தோக்குற கண்டிஷன் ஆனதும் ஓட்டு எண்ணிக்கையை நிருத்திவைத்ததும் திடீரென வெற்றி பெற்றதாக அறிவித்ததும் அட அட அட.. அதுபோல மகாராஷ்டிரா தேர்தலில் லட்சக்கணக்கில் போலி வாக்காளர்களை சேர்த்து நூறு ஒட்டு இருநூறு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும்.....உண்மையில் பாஜக மேலயும்,தேர்தல் கமிஷன்மேலாயும்தான் வழக்கு போடணும்....


நிவேதா
ஜூன் 11, 2025 22:30

இந்த வழக்கினால் ஒன்றும் நடக்காது. நடந்தாலும் பப்பு சகோதரிக்கே தீர்ப்பு சாதகமாகும். அப்படியே இந்த வெற்றி செல்லாது என கோர்ட் சொன்னாலும் மறுதேர்தலில் ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்க அமைதி மார்க்கத்தினர் அந்த தொகுதியில் ஏராளமாக உள்ளனர்


GMM
ஜூன் 11, 2025 21:42

தேர்தல் சீர் திருத்தம் தான் மாற்று மருந்து. சாதி,மத அடிப்படையில் ஓட்டு, மத இட ஒதுக்கீடு தடுக்க வேண்டியது உச்ச நீதிமன்ற பணி. ஒரு வாக்காளர் தன் தொகுதியில் மட்டும் வாக்கு போட அனுமதி. வேட்பாளர் ஒரு வினாடி கூட குடி இருக்காத தொகுதியில் போட்டியிடலாமாம். இது சரியா?


மனிதன்
ஜூன் 11, 2025 22:53

தல வாரணாசியிலாய குடியிருக்கார் ???


sankaranarayanan
ஜூன் 11, 2025 21:07

குடும்பத்தினர் மற்றும் தனது சொத்துகள் குறித்த பல்வேறு முக்கிய தகவல்களை வேட்புமனுவில் பிரியங்கா மறைத்துவிட்டார் இது வேட்பாளரின் மாபெருந்தவறு . இதை கணம் கோர்ட்டார் அவர்கள் சாதாரணமாக நினைக்காமல் ஒரு பாராளுமன்ற நபரின் நேர்மையில் பங்கம் வந்ததாக கருதி அவரது தேர்வை ரத்து செய்ய வேண்டும் .மக்களிடம் மறைப்பது பாராளுமன்ற நபரின் தில்லு முல்லு தில்லாலங்கடி தனமாகும் .இதை அறவே ஒழிக்க வேண்டுமானால் நீதி அரசர் இவரது தேர்வை ரத்து செய்ய வேண்டும் .அப்போதுதான் தர்மம் தலைகாக்கும்


புதிய வீடியோ