கொச்சி: கேரள போலீசாரால் துவங்கப்பட்ட, 'ஆன்லைன்' ரத்த வங்கி சேவையால், ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் காக்கப் பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக, 'ஆன்லைன்' மூலமான ரத்த வங்கி சேவையை, கேரள போலீசார், 2021ல் துவங்கினர். அவசர தேவை அவசர காலங்களில் ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவும் வகையில், இதற்காக பிரத்யேக, 'மொபைல் போன்' செயலியை கேரள போலீசார் உருவாக்கினர். உடனே ரத்தம் தேவை எனில், தங்கள் மொபைல் போனில், 'போல்பிளட்' (POLBlood) என்ற பெயரில் உள்ள செயலியை பதிவிறக்கம் செய்து, தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் நபர்களின் அவசர தேவையை அறிந்து, அவர்களுக்கான ரத்த மாதிரியை இடைத்தரகர்களின் உதவியின்றி நேரடியாக பெற்று தருகின்றனர். இந்த செயலியின் வாயிலாக, க டந்த நான்கு ஆண்டுகளில், 1,13,000 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை மற்றும் டயாலிசிஸ், புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோர் பெரிதும் பயனடைந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இதுவரை 60,790 பேர் இந்த செயலியில் பதிவு செய்துள்ளனர். இதுதவிர, 97,788 ரத்த யூனிட்கள் தேவைப்பட்ட நிலையில், 'போல்பிளட்' செயலி வாயிலாக 49,641 ரத்த யூனிட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதிக தொகை இந்த செயலி குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகை யில், 'ரத்த வங்கி இல்லாத நிலையில், தன்னார்வலர்களின் வாயிலாக ரத்த தானம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 'அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவோர், இடைத்தரகர் அல்லது தனியார் ரத்த வங்கி வாயிலாக ரத்தம் பெற அதிக தொகை செலுத்த வேண்டிய நிலை இருப்பதாக புகார் எழுந்தன. இதைத் தடுக்கும் நோக்கில், இச்செயலி உருவாக்கப்பட்டது' என்றார்.