உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள பாதிரியாருக்கு கர்தினால் பதவி; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

கேரள பாதிரியாருக்கு கர்தினால் பதவி; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கேரளாவின் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட், 51, கர்தினாலாக நியமிக்கப்பட்டிருப்பது நம் நாட்டிற்கு பெருமை' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்கர்களின் தலைமை குருவாக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். இவருக்கு ஆலோசனை வழங்கவும், கத்தோலிக்க சமய முக்கிய முடிவுகள் எடுப்பதிலும் கர்தினால்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். போப் தேர்வில், ஓட்டு போடும் தகுதியும் கர்தினால்களுக்கு உள்ளது. பல்வேறு மறை மாவட்டத்திற்கு தலைமையாக கர்தினால் செயல்படுவார்.உலகம் முழுதும் 100க்கும் மேற்பட்ட கர்தினால்களை தேர்ந்தெடுத்து, போப் பிரான்சிஸ் நியமிப்பார். இந்நிலையில், கர்தினால் பொறுப்புக்கு கேரளாவின் செங்கனாச்சேரியைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவரது பதவியேற்பு விழா, வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் நேற்று நடந்தது. அப்போது, ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட்டுக்கு, போப் பிரான்சிஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 புதிய கர்தினால்களும் நியமிக்கப்பட்டனர்.இந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடி சமூக வலை தளத்தில் கூறுகையில், 'புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினாலாக ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட்டை, போப் பிரான்சிஸ் நியமித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 'கர்தினாலாக நியமிக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட்டுக்கு என் வாழ்த்துகள். தங்களை தேர்வு செய்தது, இந்தியாவுக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. 'மனிதகுல சேவைக்காக தன்னை அர்ப்பணித் துள்ள ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட்டிற்கு என் வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sidharth
டிச 09, 2024 11:12

இதனால் இந்தியராகிய நமக்கு ஒரு பயனும் இல்லை. அந்த மதத்தில் குறைகள் ஏராளம் உண்டு என்றாலும் மதத்துக்குள் சமத்துவம் என்பது உண்மைதான் உடனே சங்க உறுப்பினர்கள் கிறிஸ்தவத்துக்குள் சாதி உண்டு என்று கம்பு சுத்த வேண்டாம் அது இந்தியாவில் பரவியுள்ள நோய். கல்வி மருத்துவம் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கொண்டு சேர்த்தது அந்த மதம்தான். அதற்காக நன்றி. உடனே என்னை ...ஆக்க வேண்டாம். என் குல தெய்வம் மதுரகாளி


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 09, 2024 11:45

ரெம் கெட்டான் கருத்துக்கு ஒரு நல்ல உதாரணம் ..... பரிந்துரைத்தவரை பாராட்டவும் மனசில்ல .... பரிந்துரைத்தவரை குறை சொன்னால் அவங்கள்லாம் விடியல் மேல காட்டம் ஆயிடுவாங்க என்கிற டவுட் ...


Barakat Ali
டிச 09, 2024 09:28

மத விற்பன்னர்களுக்கு, மத விற்பனையாளர்களுக்கு எரியும் .....


kantharvan
டிச 09, 2024 11:20

எரிகிறது சங் வயிறுதான் .


Duruvesan
டிச 09, 2024 06:29

உலக மகா நடிப்புடா சாமி


ghee
டிச 09, 2024 08:16

எது நடிப்பு திராவிட சோம்பே


N.Purushothaman
டிச 09, 2024 09:47

இதுல என்ன நடிப்பை நீங்க அப்படி கண்டுபுடுச்சிட்டீங்க? இதனியாவில் ருந்து இது வரை கார்டினல்கள் இல்லாத நிலையில் மோதி அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து போப் இதை அறிவித்து உள்ளார்கள் ....இது உங்களுக்கு நடிப்பா தெரியுதா ?


Haja Kuthubdeen
டிச 09, 2024 11:18

அனைத்தயுமே நடிப்பாக ஏன் சிந்திக்கனும்.பிரதமர் மோடி அனைத்து மதத்தையும் மதித்து வருவது நல்ல அறிகுரிதானே..மோடி இந்த நிகழ்வை கண்டுக்காமலே இருந்து இருந்தாலும் யாரும் குறையோ கண்டனமோ தெரிவிக்க போவதும் இல்லை.இருந்தும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.பாராட்டவில்லை என்றாலும் குறை சொல்லாமல் இருக்கலாமே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை