உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக கேரளா தீர்மானம்

வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக கேரளா தீர்மானம்

திருவனந்தபுரம்; வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், புதிய மசோதாவை ஆக.08-ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதையடுத்து மசோதா பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்று கேரள சட்டசபை கூட்டம் நடைபெற்றது. மாநில அமைச்சர் அப்துரஹமான் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தார்.அப்போது அவர் பேசியது, வக்பு வாரிய திருத்த மசோதா மாநில உரிமைகளை மீறுவதாகும், வக்பு சொத்துக்களை மேற்பார்வையிடும் வக்பு வாரியங்கள் மற்றும் தீர்ப்பாயங்களின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதாக உள்ளது என்றார். இதையடுத்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

தமிழ்வேள்
அக் 15, 2024 13:03

எஸ் டி பி ஐ கட்சி அமைச்சர் மருமவன் அழுத்தம் தாங்காமல் , பினாராயி எடுத்த நிலை ....விடம் சிக்கிக்கொண்டு இருக்கிறது .......


Gnanasiddhar
அக் 15, 2024 07:56

வக்பு வாரியத்தை கலைக்க வேண்டுமே தவிர அதை மறு ஆய்வு செய்வது தவறாகும்


Dharmavaan
அக் 15, 2024 07:51

மத்திய ரஸுக்கு எதிராகவோ உச்சநீதி தீர்ப்புக்கு எதிராகவோ மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்று சட்டம் வேண்டும் செய்தால் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் மத்திய அரசு அனுமதியின்றி மாநில மசோதாக்கள் சட்டமாக்க முடியாது என்று சட்டம் வேண்டும்


Dharmavaan
அக் 15, 2024 07:49

துருக்கனுக்கு வால் பிடிக்கும் கூட்டம் ..ஓட்டுக்காக எந்த அநியாயத்தையும் அவர்கள் செய்யலாம் என்றால் அடிமைத்தனம். ஒருத்தன் கூடவா எதிர்க்க மாட்டான் கேவலம்


Rajasekar Jayaraman
அக் 15, 2024 06:54

உன்னோட தீர்மானத்தை யார் கேட்டது ஆட்சி கலைக்க படும்.


Ram
அக் 15, 2024 06:52

இவர்கள் தீர்மானத்தை கொண்டுபோய் குப்பையில் கொட்டலாம்


சுலைமான்
அக் 15, 2024 06:32

அதானே? அதெப்படி திருத்தலாம்? அவனுங்க ஓட்டுகள வச்சி தானே நம்ப பொழப்பு நடக்குது.


Kasimani Baskaran
அக் 15, 2024 05:33

வக்ப் வாரியத்துக்கு இவ்வளவு நிலம் எப்படி வந்தது என்று பொது மக்களுக்கு விளக்கினால் நன்றாக இருக்கும். ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டவை. இவற்றையெல்லாம் சரி பார்க்க வேண்டும்.


J.V. Iyer
அக் 15, 2024 05:11

திருட்டு கும்பல்கள், பயங்கரவாதிகள், தேசவிரோதிகள் ஒன்று சேருவதில் வியப்பென்ன? பாஜக இவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க உடனே சட்டங்களை நிறுத்தவேண்டும். நல்ல நீதி அரசர்களை நியமிக்கவேண்டும்.


GMM
அக் 14, 2024 23:10

கேரள தீர்மானம் எதிர்த்து ஆந்திராவில் மசோதா தாக்கல் செய்ய முடியாதா? செல்லாதா? தேச தீர்மானம் எதிர்க்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை. நில நிர்வாக பணி மட்டும். மகள் சிக்கலுக்கு பதில் நடவடிக்கை? வக்பு வாரியம் ஏன் தேவை? பட்டா, கிரய பத்திர சொத்துக்கு விவரம் தனி நபரிடம் இருக்கும். அவர்களிடம் தானமாக பெற்று கொள்ளுங்கள். பிற சொத்து பூர்விக மக்களுக்கு மட்டும் சொந்தம். அரசியல் அமைப்புக்கள் தானமாக கொடுத்தாலும் குறிப்பிட்ட காலம் வரை தான் செல்லும். மதம், கலாச்சாரம் மாறும் போது பூர்விகம் தானே மாறிவிடும்.