உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் தரணும்; குழந்தையின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்த கேரளா

அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் தரணும்; குழந்தையின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்த கேரளா

திருவனந்தபுரம்: கேரளாவில் அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் வழங்க வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அதை கேரளா அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.கேரளாவில் அங்கன்வாடி படிக்கும் ஒரு குழந்தை உப்புமாவுக்கு பதிலாக பொரித்த கோழி, பிரியாணி தாங்க என கோரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. வைரலாகும் வீடியோவில், தொப்பி அணிந்திருந்த குழந்தை, 'எனக்கு அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி மற்றும் பொரித்த கோழி வேண்டும் என்று அப்பாவி போல் தனது தாயிடம் கேட்கிறான். இந்த வீடியோவை குழந்தையின் தாய் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோவை மேற்கோள் காட்டி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தை கோரிக்கை வைக்கும் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: குழந்தை அப்பாவித்தனமாக கோரிக்கை விடுத்துள்ளான். அங்கன்வாடியின் மெனு திருத்தப்படும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காக அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்தின் கீழ், அங்கன்வாடிகள் மூலம் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையுடன் ஒருங்கிணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன. இவ்வாறு அவர் கூறினார். நெட்டிசன்களும் குழந்தையின் கோரிக்கையை ஆதரித்தனர். சிலர் சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் உணவைக் குறைத்து, அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகளுக்கு சிறந்த உணவை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ram pollachi
பிப் 04, 2025 20:18

வளரும் குழந்தையை கரிச்சு கொட்ட வேண்டாம் நண்பா!


M Selvaraaj Prabu
பிப் 04, 2025 19:48

மெனுவை திருத்தலாம். ஆனால் முட்டை தவிர வேறு அசைவம் வேண்டியதில்லை. அது சரி. இந்த குழந்தை எத்தனை வாய் பிரியாணி சாப்பிடும்? பொறித்த கோழி துண்டுகள் பெரியதா, சிறியதா சாப்பிடும்? சிலர் சமூக வலைத்தளத்தில் கவனம் பெற வேண்டி தங்கள் குழந்தைகளுக்கு இப்படி பேச, செய்ய பயிற்சி கொடுத்து, வீடியோ எடுத்து பதிவு செய்கிறார்கள். பார்த்து ரசிக்கலாம், ஆனால் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை.


KRISHNAN R
பிப் 04, 2025 18:40

அப்போ நல்ல தூங்குவான்.. படிக்கமாட்டான்


ராம்நாயர்
பிப் 04, 2025 16:34

கோபி சந்தனத்துடன் கள்ளங்கபடம் இல்லாம கேக்கறான். கட்டாயம் போடணும்.


அப்பாவி
பிப் 04, 2025 16:32

ஏன் பாப்பா பெரோட்டையும் பீஃபும் கேக்க வேண்டியதுதானே? எங்கே போனாலும் திங்க கெளம்பிடுங்க.


Ram pollachi
பிப் 04, 2025 15:23

நம் ஊர் குழந்தைகள் சத்துமாவு உருண்டை சாப்பிடவே அஷ்ட கோணல் செய்யும். இந்த கொச்சுக்கு கோழி வேண்டுமாம் முழுவதும் மருந்தில் வளரும் பண்ணை கோழிகளை தின்றால் உடலுக்கு தீங்கு என்பதை டீச்சர்கள் புரிய வைக்க வேண்டும். வயதுக்கு மீறிய உடல் எடை, காமம், நோய்கள் எல்லாம் வந்து விடும் ஜாக்கிரதை.


Rasheel
பிப் 04, 2025 13:52

முட்டையே அழுகியது சப்ளை செய்து நோய் வாய் படும் போது ... பிரியாணி தான் நினைவிற்கு வருகிறது.


ram
பிப் 04, 2025 12:26

குழந்தைகள் படிக்கச் வருகிறார்களா பிரியாணி தின்ன வருகிறார்களா, மதிய உணவு சரி. அப்புறம் அந்த சிறுவன் வேறு எதாவது கேட்பான் அவர்கள் பெற்றோர் சொல்லிக் கொடுத்த படி, அதையும் இந்த அரசுகள் செய்யுமா. மக்கள் வரி பணம் என்னமோ இவர்கள் பணத்தை கொடுப்பது மாதிரி , நல்ல கல்வியை கொடுங்கள் அதுபோதும்.


KULANJINATHAN G
பிப் 04, 2025 11:58

பள்ளிகளில் அசைவ உணவு கண்டிப்பாக தரமாக கொடுக்கமுடியாது என்பதே நிதர்சனமான உண்மை. குழந்தைகளின் உயிருடன் விளையாடாதீர்கள்.


KULANJINATHAN G
பிப் 04, 2025 11:48

அசைவ உணவுகள் தரம் குறைவாக இருந்தால் மிகப்பெரிய சுகாதாரகேடினை விளைவிக்கும். குழந்தைகளால் அதை எதிகொள்ள முடியாது. தயவு செய்து அசைவ உணவுகள் பள்ளி குழந்தைகளுக்கு வேண்டவே வேண்டாம். தினமலர் இதனை அந்த அமைச்சருக்கு பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும்.


புதிய வீடியோ