மேலும் செய்திகள்
பஸ்சில் கடத்தி வந்த ரூ.25 லட்சம் பறிமுதல்
31-May-2025
வாகன சோதனையில் வெடிப்பொருள் பறிமுதல்
17-May-2025
பாலக்காடு; பாலக்காடு அருகே, 19.70 கிராம் போதை மாத்திரையுடன் வாலிபரை கலால் துறையினர் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலை பாம்பாம்பள்ளம் சுங்கச்சாவடி அருகே, ஒற்றைப்பாலம் கலால் இன்ஸ்பெக்டர் விபின்தாஸ் தலைமையில், நேற்று காலை 7:30 மணிக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கோவையில் இருந்து, பாலக்காடு நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி, பயணியரிடம் சோதனை நடத்தினர்.அப்போது, மலப்புரம் மாவட்டம் திரூர் மனக்கரை பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம், 25, என்பவர், 19.7 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ., போதை மாத்திரை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதை மாத்திரையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
31-May-2025
17-May-2025