உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கே.ஜி., ஹள்ளி கலவர வழக்கு வாபஸ் பெற தயாராகும் அரசு?

கே.ஜி., ஹள்ளி கலவர வழக்கு வாபஸ் பெற தயாராகும் அரசு?

பல்லாரி: பெங்களூரு கே.ஜி., ஹள்ளி, டி.ஜே., ஹள்ளி கலவர வழக்குகளை வாபஸ் பெற அரசு தயாராகி வருவதாக, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி 'பகீர்' தகவலை கூறியுள்ளார்.பல்லாரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஒரு குறிப்பிட்ட மதத்தினரை திருப்திப்படுத்தும் அரசியலை, காங்கிரஸ் அரசு தொடர்ந்து செய்கிறது. காங்., ஆட்சிக்கு வந்ததும், பழைய ஹூப்பள்ளியில் கலவரக்காரர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய, அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. இதுபோல பெங்களூரு கே.ஜி., ஹள்ளி, டி.ஜே., ஹள்ளி கலவர வழக்குகளையும் வாபஸ் பெற காங்கிரஸ் அரசு தயாராகி வருகிறது.சில ஆண்டுகளுக்கு முன், அப்போதைய காங்., - எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாச மூர்த்தி வீடு கலவரத்தில் எரிக்கப்பட்டது. ஆனாலும் அதை கண்டுகொள்ளவில்லை. காங்கிரசுக்கு 'திருப்தி அரசியல்'தான் முக்கியம். ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், குற்றவாளிகளை பாதுகாக்க காங்கிரஸ் அரசு முயற்சி செய்கிறது.அரசியல் சாசனத்திற்கும், தலித்துகளுக்கும் ஆதரவாக இருப்பதாக சொல்லும் காங்கிரஸ் தலைவர்கள், அவர்களுக்கு எதிராக உள்ளனர். காங்கிரஸ்காரர்கள் பொய் சொல்வதில் திறமையானவர்கள். கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பவர்கள், நேர்மையானவர்கள் என்றால், ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்.காங்கிரஸ் அரசு முழுக்க முழுக்க ஊழலில் சிக்கித் தவிக்கிறது. மாநிலத்தை, திவால் நிலைக்கு முதல்வர் சித்தராமையா கொண்டு செல்கிறார்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை