உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனடாவில் கைதான காலிஸ்தான் பயங்கரவாதி: நாடு கடத்த இந்தியா தீவிரம்

கனடாவில் கைதான காலிஸ்தான் பயங்கரவாதி: நாடு கடத்த இந்தியா தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கனடாவில் கைதான காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ் சிங் கில் என்ற அர்ஷ் தல்லாவை நாடு கடத்துவதற்கான முயற்சிகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது.கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பாக அந்நாடு இந்தியா மீது குற்றம்சாட்டியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சீர்குலைந்துள்ளது. நிஜ்ஜாருக்கு மிகவும் நெருங்கியவனாக கூறப்படும் அர்ஷ் சிங் கில், இந்தியாவில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்களின் பின்னணியில் உள்ளான். கனடாவில் தலைமறைவாக இருந்து வந்தான். அவனை நாடு கடத்த வேண்டும் என மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால், இதற்கு கனடா செவி சாய்க்கவில்லை.இச்சூழ்நிலையில் கடந்த மாதம் 27 , 28 ஆகிய தேதிகளில் கனடாவின் மில்டன் டவுன் நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட அர்ஷ் சிங் கில்லை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியானது. அதனை அந்நாட்டு போலீசார் உறுதி செய்தனர். இவன் காலிஸ்தான்புலிப்படை அமைப்பின் தலைவனாக இருந்துள்ளான்.இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காலிஸ்தான் புலிப்படை அமைப்பை சேர்ந்த அர்ஷ் சிங் கில் என்ற அர்ஷ் தல்லா கைது செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகம் மற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இது தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.அவன் மீது இந்தியாவில் 50 கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல், பயங்கரவாத செயல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2022ம் ஆண்டு மே மாதம் இவனுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.2023ம் ஆண்டு இவன் பயங்கரவாதியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டான். 2023ம் ஆண்டு ஜூலை மாதம் இவனை கைது செய்து நாடு கடத்தும்படி கனடாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை கனடா நிராகரித்தது. கூடுதல் தகவல்கள் அளிக்கப்பட்டது.பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தப்படி, 2023ம் ஆண்டு ஜன.,மாதம் அவனின் வீட்டு முகவரி, பணப்பரிமாற்றம், சொத்து, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கனடாவிடம் அளித்தோம். டிச., மாதம் கனடா நீதித்துறை இன்னும் கூடுதல் தகவல்களைகேட்டது. இந்தாண்டு மார்ச் மாதம் கூடுதல் தகவல்களை அனுப்பி வைத்தோம்.சமீபத்தில் அவன் கைது செய்யப்பட்ட நிலையில், நமது விசாரணை அமைப்புகள் அவனை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறது. இந்தியாவில் அவன் மீதுள்ள குற்றங்கள், கனடாவில் உள்ள குற்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்வதற்கு அவன் விரைவில் நாடு கடத்தப்படுவான் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramaswamy
நவ 15, 2024 20:14

Canada must accept Indias request to deport this terrorist which will improve the stained relation to some extend. Canada should not play vote bank tactics in this regard. World is watching Canada s activity.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 15, 2024 10:45

பஞ்சாப் சீக்கியர்கள் பலரும் மதம் மாறி கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் மதங்களை தழுவியுள்ளார்கள் போல தெரிகிறது. ஆனால் அவர்கள் சீக்கிய அடையாளத்துடன் உள்ளார்கள்.


Kasimani Baskaran
நவ 15, 2024 05:14

திருவாளர் டிரூடோவுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஆதரவு மட்டும் இல்லை என்றால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற நிலை. ஆகவே நிச்சயம் பயங்கரவாதியை நாடு கடத்த வாய்ப்பில்லை.


SUBBU,
நவ 15, 2024 04:51

Justin Trudeau has refused to reveal the names of Kalistan criminals who hid in Canada. how little coverage this has got in global media. Because media will not criticize Justin Trudeau, darling of white liberals.


முக்கிய வீடியோ