உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கருப்புக்கும் வெள்ளைக்கும் வித்தியாசம் தெரியாதவர் கார்கே: துணை ஜனாதிபதி

கருப்புக்கும் வெள்ளைக்கும் வித்தியாசம் தெரியாதவர் கார்கே: துணை ஜனாதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு, பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கு அச்சம் தரக்கூடியவருக்கும் வித்தியாசம் தெரியவில்லை என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.சென்னையில் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டியளித்த போது, மோடியை 'பயங்கரவாதி' என குறிப்பிட்டார். அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அதற்கு கார்கே விளக்கம் அளித்தார்.அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடிக்கு, பெண்கள் விடுதலை, சமூக நீதி, ஜனநாயகம் என்பதே கிடையாது. அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து, எதிர்க்கட்சிகளை பா.ஜ., மிரட்டி, அச்சுறுத்துகிறது. அதன் அடிப்படையில், பிரதமர் மோடி ஒரு பயங்கரவாதி.இவ்வாறு கார்கே கூறினார்.பேட்டியின்போது, பிரதமர் மோடியை 'பயங்கரவாதி' என கார்கே கூறியதும், அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உடனே, ''மோடியை தனிப்பட்ட முறையில் நான் கூறவில்லை. ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்வதால், அப்படி குறிப்பிட்டேன்,'' என கார்கே விளக்கம் அளித்தார். இதற்கு பாஜ தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கர்நாடகா சென்றுள்ளார். பிதார் பகுதியில் நடந்த விழா ஒன்றில் அவர் பங்கேற்றார். இவ்விழாவில் கார்கேயும் கலந்து கொண்டார்.அப்போது சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: சில நேரங்களில், காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு கருப்புக்கும் வெள்ளைக்கும் அல்லது பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கு அச்சம் தரக்கூடியவருக்கும் வித்தியாசம் தெரியவில்லை என நான் உணர்கிறேன் எனத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
ஏப் 23, 2026 19:16

கான் கிராஸ் கட்சி ஒழிந்தால் நாட்டில் பாதி தீவிரவாதம் ஒழிந்து விடும்.... தீவிரவாதிகளின் முக்கிய ஆதரவாளர்கள் இவர்கள் தான்.


பேசும் தமிழன்
ஏப் 23, 2026 19:11

பயங்கரவாதிகளுக்கு.... அடுத்தவர்களை பார்த்தால்... தங்களை போலவே தோன்றும்.... அப்படி தான் கார்கே உளறலை எடுத்துக் கொள்ள வேண்டும்.


venugopal s
ஏப் 22, 2026 22:19

பாஜக ஆட்சியில் தான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ,ஆளுநர் எல்லோருமே அவர்கள் பதவிக்குரிய மாண்பை மீறி அரசியல் பண்ண ஆரம்பித்து விட்டனர்!


venu ennum kothadimai, s
ஏப் 23, 2026 06:04

பின்ன அரசியல் செய்யாமல் அவியல் லா செய்வார்கள்? விஷத்தை விஷத்தால் தான் எடுக்க வேண்டும்


vivek
ஏப் 23, 2026 20:55

கற்பூர வாசனை தெரியவில்லையே....


Rathna
ஏப் 22, 2026 19:02

என்ன தான் மேலே தூக்கி வைத்தாலும் உண்மை முகம் பல நேரங்களில் பல விதமாக வெளி வருகிறது. பல ஆயிரம் கோடி சொத்து எப்படி எல்லாம் மனிதனை பேச வைக்கிறது.


SUBBU,MADURAI
ஏப் 22, 2026 18:42

கார்கே, அவருடைய தாயையும், சகோதரியையும் உயிருடன் எரித்த முஸ்லீம்களை ஒருபோதும் பயங்கரவாதிகள் என்று அழைத்தது கிடையாது. அவர்களின் பயங்கரவாதம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், கார்கேவின் குடும்பம் ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகாவுக்குத் தப்பி ஓடியது என்பதை கார்கே ஓட்டு அரசியலுக்காக மறைத்து மக்கள் பணியாற்றும் நாட்டின் பிரதமரை பயங்கரவாதி என்றழைப்பது கேவலத்தின் உச்சம்.


sankar
ஏப் 22, 2026 18:31

காங்கிரசு நபர்கள் எல்லாருமே நிரகுருடர்கள்தான்


Gopal
ஏப் 22, 2026 21:03

தேச துரோகிகளும்


Shekar
ஏப் 22, 2026 18:25

நேரடியாக சொல்லலாமே.


Shekar
ஏப் 22, 2026 18:46

பார்வை இழந்தவர் என்று நேரடியாக சொல்லலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை