உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏப்.6க்கு பதில் ஏப்.8ல் கோல்கட்டா, லக்னோ மோதல்: பிரிமியர் லீக் போட்டி தேதி மாற்றம்

ஏப்.6க்கு பதில் ஏப்.8ல் கோல்கட்டா, லக்னோ மோதல்: பிரிமியர் லீக் போட்டி தேதி மாற்றம்

மும்பை; கோல்கட்டா, லக்னோ அணிகள் இடையேயான பிரிமியர் லீக் போட்டி ஏப்.8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் முக்கிய தொடரான பிரிமியர் லீக் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருப்பதால் அடுத்து வரக்கூடிய ஆட்டங்களை அவர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளனர். இந் நிலையில், ஏப்.6ம் தேதி நடக்க இருந்த கோல்கட்டா,லக்னோ அணிகள் இடையேயான போட்டி ஏப்.8ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடக்க இருந்தது. ஆனால், கொல்கத்தா போலீசின் வேண்டுகோளுக்கு ஏற்ப போட்டி தேதி மாற்றப்பட்டு இருக்கிறது. போட்டி நடக்கும் நாளில் ராம நவமி கொண்டாட்டங்கள் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால் உரிய பாதுகாப்பு அளிக்கமுடியாது என்று பெங்கால் கிரிக்கெட் சங்கத்துக்கு கோல்கட்டா போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். இதையடுத்து, போட்டி தேதியை ஏப்.8க்கு நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. அதே ஈடன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கும் என்று பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. பிரிமியர் லீக் தொடரில் வழக்கமாக ஞாயிறன்று இரு போட்டிகள் நடக்கும். தற்போது ஏப்.6ம் தேதி நடக்கும் போட்டி மாற்றப்பட்டு உள்ளதால் அன்றைய தினம் ஹைதராபாத்,குஜராத் அணிகள் மோதும் போட்டி மட்டுமே நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி