மேலும் செய்திகள்
என்னை கொல்ல முயற்சி லாலு மகன் கதறல்
24 minutes ago
ஏ.ஐ., புகைப்படம் பதிவிட்ட கேரள காங்., நிர்வாகி கைது
24 minutes ago
ஐதராபாத்:தெலங்கானா மாநிலத்தில் 5ஆயிரம் பேர் பங்கேற்று நிகழ்த்திய குச்சிப்புடி நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது.தெலங்கானா மாநிலம் காக்சிபவுலி என்னுமிடத்தில் அமைந்துள்ள ஜிஎம்சி பாலயோகி மைதானத்தில் பாரத் ஆர்ட்ஸ் அகாடமி மற்றும் மாநில அரசு இணைந்து இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான வசுதா கதிரி, லலிதா ராவ் ஆகியோர் கூறியதாவது:12 ஆண்டுகள் பழமையான இந்த அகாடமி, பாரம்பரிய, மேற்கத்திய மற்றும் நாட்டுப்புற நடனங்கள், இசை மற்றும் இசைக் கருவிகளில் பயிற்சி அளிக்கப்ட்டு வருகிறது. குச்சிப்புடியில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக ஒன்பது மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும், மும்பை, ராய்ப்பூர், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற இந்திய நகரங்களிலிருந்தும் நடனக் கலைஞர்கள் வந்திருந்தனர். இதற்காக மாணவர்கள் இரண்டு மாத பயிற்சியில் ஈடுபட்டனர். என கூறினர்.முன்னதாக இதே அகாடமி கடந்த 2023-ம் ஆண்டு டிச., 24-ல் குச்சிப்புடி நடனத்தில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக 4 ஆயிரம் பேர்களை பங்கேற்க செய்து முதன்முறையாக சாதனை படைத்தது. தற்போது இரண்டாவது முறையாக 5 ஆயிரம் பேர்களை பங்கேற்க செய்து தன்னுடைய முந்தைய சாதனையை முறியடித்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வகிட்டி ஸ்ரீஹரி மற்றும் விளையாட்டு ஆணையத்தலைவர் சிவாசேனா ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலைஞர்களை உற்சாகப்படுத்தினர்.
24 minutes ago
24 minutes ago