உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குல்காம்: ஜம்முகாஷ்மீரில் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இதுபற்றிய விவரம் வருமாறு; குதார் வனப்பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறையினர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, அந்த குறிப்பிட்ட வனப்பகுதியில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து, பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.அப்போது வனப்பகுதியில் பதுங்கியருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.பல மணிநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். ராணுவத்தினர் தரப்பில் ஒருவர் காயம் அடைந்தார். துப்பாக்கிச் சண்டையின் முடிவில், எஞ்சிய பயங்கரவாதிகள் அங்கிருந்து அடர் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர்.அவர்களை பிடிக்கும் வகையில், பாதுகாப்பு படையினர் பல குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kasimani Baskaran
செப் 08, 2025 16:29

கொலை என்று செய்தி போடுவதே தவறு. கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி அழிக்கப்பட்டான் என்று இருக்கவேண்டும்.. முடிந்தால் பெயர் போடலாம்.


Barakat Ali
செப் 08, 2025 14:00

நாடு நாசமாக வேண்டும் என்று நினைக்கும் உள்ளூர், உள்நாட்டு புல்லுருவிகளுக்காகப் போராடுகிறார்கள் ....


Artist
செப் 08, 2025 13:00

டூரிஸத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டு இன்னொரு காசா ஆகும் எண்ணம் தான்


Rathna
செப் 08, 2025 12:30

புற்று ஈசல் போல வரும் பாகிஸ்தானிய ஜிஹாதி கரையான்களை அழிப்பது அவசியம்.


nagendhiran
செப் 08, 2025 12:10

பயங்கரவாதிகலை மட்டும் இல்லாமல் மதத்தின்"பெயரிலோ? அல்லது பணத்திற்காக அவர்களுக்கு"அடைக்கலம் தந்தவர்களையும் கைது செய்தால்தான் இதெல்லாம் முடிவிற்கு வரும்?


Ramesh Sargam
செப் 08, 2025 11:58

ஸ்வீட் எடு, கொண்டாடு. பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை