உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டி.நரசிபுரா திரிவேணி சங்கமத்தில் பிப்.,10 - 12 வரை கும்பமேளா

டி.நரசிபுரா திரிவேணி சங்கமத்தில் பிப்.,10 - 12 வரை கும்பமேளா

மைசூரு: ''மைசூரு டி.நரசிபுரா திரிவேணி சங்கமத்தில், பிப்., 10 முதல் 12ம் தேதி வரை கும்பமேளா நடக்கிறது,'' என, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தெரிவித்தார்.மைசூரில் நேற்று டி.நரசிபுரா திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடத்துவது தொடர்பாக, அதிகாரிகளுடன், அமைச்சர் மஹாதேவப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:டி.நரசிபுரா திரிவேணி சங்கமத்தில், 1989 முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பமேளா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, பிப்., 10 முதல் 12ம் தேதி வரை கும்பமேளா 2025 நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.விழா பகுதியில் துாய்மை பராமரிக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் இல்லா பகுதியாக மாற்ற வேண்டும். சுத்தமான குடிநீர் வசதியும், மொபைல் கழிப்பறையும் செய்யுங்கள்.பாரம்பரிய மற்றும் கலாசார இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். கே.எஸ்.ஆர்.டி.சி., சார்பில் திரிவேணி சங்கமத்துக்கு கூடுதல் பஸ்களை ஏற்பாடு செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.காங்கிரஸ் எம்.எல்.சி., யதீந்திரா பேசியதாவது:மூன்று நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், லட்சக்கணகான பக்தர்கள் வருவர். பிப்., 11ம் தேதி காவிரி ஆரத்தி நடைபெறும். குறிப்பிட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள். அன்னதானம் வழங்கும் பகுதியை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.தீயணைப்பு வாகனங்கள், தீ அணைப்பு கருவிகள் தயாராக வைத்திருக்க வேண்டும். தங்கும் விடுதிகள் அருகில் பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். திரிவேணி சங்கமத்துக்கு செல்லும் சாலைகள் சீராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !