உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபை பா.ஜ., கொறடாவாக லட்சுமி நகர் எம்.எல்.ஏ., நியமனம்

சட்டசபை பா.ஜ., கொறடாவாக லட்சுமி நகர் எம்.எல்.ஏ., நியமனம்

சாணக்யாபுரி:சட்டசபை பா.ஜ., தலைமை கொறடாவாக லட்சுமி நகர் எம்.எல்.ஏ., அபய் குமார் வர்மா, 52, நியமிக்கப்பட்டார்.கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.முதல்வர் ரேகா குப்தா மற்றும் மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டம் தொடர்பாக கட்சி வெளியிட்ட அறிக்கை:எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தின்போது, சட்டசபையில் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக தலைமை கொறடாவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைவரின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.இதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவாவுக்கு அனைவரும் வழங்கினர். இதையடுத்து தலைமை கொறடாவை நியமிப்பது குறித்து முதல்வர் ரேகா குப்தாவுடன் வீரேந்திர சச்தேவா ஆலோசித்தார். அதன்பின் சட்டசபை பா.ஜ., தலைமை கொறடாவாக லட்சுமி நகர் எம்.எல்.ஏ., அபய் குமார் வர்மாவை நியமிக்கப்பட்டார்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து அபய் குமார் வர்மா கூறுகையில், “தலைமை கொறடாவாக, சட்டசபையை சுமூகமாக நடத்துவதற்கு கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவேன்,” என்றார்.லட்சுமி நகர் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பூர்வாஞ்சலி தலைவரும், டில்லி மாநில பா.ஜ.,வின் தலைமை செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி