உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அதிரடி: இந்திய அணி 231 ரன் குவிப்பு

திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அதிரடி: இந்திய அணி 231 ரன் குவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி 'டி 20' கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன் குவித்துள்ளது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. லக்னோவில் நடக்க இருந்த நான்காவது போட்டி மோசமான வானிலை (பனிப்பொழிவு) காரணமாக ரத்தானது. ஐந்தாவது, கடைசி போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் (டிச. 19) நடக்கிறது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் காயம் காரணமாக சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். பும்ரா அணியில் சேர்க்கப்பட்டார்.இதனையடுத்து இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிசேக் சர்மா நல்ல துவக்கம் கொடுத்தனர். 22 பந்துகளில் சஞ்சு சாம்சன் 37 ரன் எடுத்து லிண்டே பந்தில் போல்டானார்.அபிசேக் சர்மா 21 பந்தில் 34 ரன் எடுத்து போஸ்ச் பந்தில், டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்னில் போஸ்ச் பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.ஆனால், திலக் வர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்களை குவித்தனர். திலக் வர்மா 73 ரன் எடுத்தபோது ரன் அவுட்டானார். பாண்டியா 25 பந்தில் 63 ரன் எடுத்து பார்ட்மன் பந்தில், ஹென்ட்ரிக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்தது. சிவம் துபே 10 ரன்னுடன் களத்தில் இருந்தார்.தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற 232 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி