உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதைப்பொருள் நடமாட்டம் என்பது அவதூறு! கவர்னரை விமர்சித்த அமைச்சர் ரகுபதி

போதைப்பொருள் நடமாட்டம் என்பது அவதூறு! கவர்னரை விமர்சித்த அமைச்சர் ரகுபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; போதைப்பொருள் நடமாட்டம் குறித்து கவர்னர் ஆர்.என். ரவி கூறிய கருத்துக்கு சட்ட அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; சங்கரன்கோவிலில் நடந்த கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, “தமிழக போலீஸார் ஒரு கிராம் கூட ரசாயன போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்யவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சாவை மட்டுமே பிடித்துள்ளனர்” என்று வழக்கம்போல் அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி இருப்பதற்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கவர்னர் மாளிகைக்குள்ளும், வெளியேவும் அரசியல் பேசுவதையும், அவதூறுகளை அள்ளி வீசுவதையும் தனது பொழுதுபோக்காக வைத்திருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டு உள்ளன. 'போதையில்லா தமிழகத்தை' உருவாக்க நேர்மையான நடவடிக்கைகளை எங்கள் முதல்வரே முன்னின்று தொடர்ந்து எடுத்து வருகிறார். வரலாற்றிலேயே முதன்முறையாகப் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகளின் முதல் மாநில மாநாட்டை 2022 ஆகஸ்ட் 10ம் தேதி முதல்வர் நடத்தினார். இப்படியொரு மாநாட்டை அ.தி.மு.க., ஆட்சியில் நடத்தவே இல்லை. தி.மு.க., ஆட்சியில் கடந்த மூன்றாண்டுகளில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளால், இன்றைக்கு போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. கவர்னர் முழு நேர அரசியல்வாதியாக இருப்பதால் நிர்வாகத்தில் நடப்பது தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை எப்படி எடுக்கப்படுகிறது என்பதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல், பா.ஜ., மேடையில் நிற்பவராக தன்னை மாற்றிக் கொண்டு பச்சைப் பொய்களை பேசுவது வெட்கக்கேடானது. புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே கவர்னர் சொன்னது அப்பட்டமான பொய் என்பது புரியும். “கஞ்சா அல்லாத போதைப் பொருட்களை தமிழகத்தில் மத்திய அரசின் அமைப்புகளே கைப்பற்றுகின்றன” என சொன்னது வடிகட்டிய பொய் என்பது விளங்கும்.தமிழக முதல்வர், போதைப் பொருள் விற்பனையை ஒழிக்க ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். போதைப் பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு காணொளி 1.5 கோடி மாணவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான குழுக்கள் உருவாக்கப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களே குட்கா விற்பனைக்கு துணை போனார்கள்.குட்கா வழக்கில் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் மீதான வழக்குக்கு அனுமதி கொடுக்கும் கோப்பை கூட ஒரு வருடத்துக்கும் மேலாக கிடப்பில் போட்டு வைத்திருந்த கவர்னர், போதைப் பொருள் ஒழிப்பு பற்றி இப்போது வாய்கிழியப் பேசுவது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதை விட, தி.மு.க., அரசின் தீவிர நடவடிக்கையைக் கொச்சைப்படுத்திப் பேசும் தார்மீக உரிமை கவர்னருக்கு இருக்கிறதா? என்று கேட்க விரும்புகிறேன்.இந்தியா முழுவதும் கூட பா.ஜ., நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் ஏன் பேச மறுக்கிறார்?. போதை பொருள்களின் தலைநகர் குஜராத் பற்றியெல்லாம் ஏன் வாய் திறப்பதில்லை?இவ்வாறு அமைச்சர் ரகுபதி தமது அறிக்கையில் கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Lion Drsekar
அக் 08, 2024 10:40

இதுபோன்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளுநர் மாறுவேடத்தில் ஒரு வாகனத்தை வாடைக்கு இதுக்கொண்டு பயணிகள் போல் சென்று எந்த மூலை முடுக்கிலும் பயணம் செய்து, ஓட்டுனரிடம் என்ன ப வேண்டும் என்று கேட்டால் அந்த கடைக்கு அவரே அழைத்துச் சென்று நிறுத்துவார், காற்று எங்கெல்லாம் இருக்கிறியாதோ அங்கெல்லாம் யார் யாருக்கு எதுவேண்டும் அவைகள் அனைத்துமே கிடைக்கிறது இப்பொவுலகில், வந்தே மாதரம்


ஜானிஜகன்
அக் 08, 2024 07:36

கரெக்டுதான். போதைப் பொருள் எப்பிடி தானே நடமாடும்?


ramani
அக் 08, 2024 05:55

ஆளுநர் ரவி அவர்களே நீங்கள் மிகவும் சரியாக சொன்னீர்கள்.தங்கள் பேச்சில் உண்மை இருக்கிறது.


xyzabc
அக் 08, 2024 00:08

உண்மையை காட்டினால் இந்த ரகுவிற்கு ஏன் கோபம் ?


ஆரூர் ரங்
அக் 07, 2024 21:17

அமைச்சர் நிதானத்தில்தான் பேசினாரா?மற்ற புகையிலைப் பொருட்களை விற்க அனுமதித்து விட்டு குட்காவை மட்டுமே தடை செய்வதால் என்ன பயன்? என்ன அர்த்தம்? சிகரெட் தயாரிப்பாளர்களிடமிருந்து என்ன கிடைத்ததோ என மக்கள் எண்ணவில்லையா? இப்போ குட்காவை போன்றே அபின், மெத் போன்ற ஐட்டங்கள் எளிதாகக் கிடைக்கிறது என்பது உண்மையில்லையா?


GMM
அக் 07, 2024 21:04

தமிழக போலீசார் பிடித்த இரசாயன போதை பொருள் இடம் எது என்று அமைச்சர் கூறவில்லை? போதை பொருள் எதிர் நடவடிக்கை தீவிரம். வரலாற்றில் முதன்முறையாக போதை தடுப்பு மாநில மாநாடு. போதை தடுப்பில் தமிழகம் முன்னிலை. ஆய்வு கூட்டம். விழிப்புணர்வு. 18000 க்கு மேற்பட்ட போதை எதிர்ப்பு குழு. இந்த தகவல் அனைத்தும் கூறுவது தமிழக அமைச்சர். போதை பொருள் விற்பனையில் தமிழகம் நிரம்பி வழிகிறது என்று விமர்சனம் மூலம் பொருள்படும். கவர்னர் சொன்னதில் உண்மை உள்ளது. அரசியல்யில்லை. கவர்னர் பதவியின் அதிகாரம் தெரிந்து அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் பேசுவதுயில்லை. கவர்னர் தான் முழுநேர மாநில முதல் செயல், நிர்வாக அதிகாரி. ஒரு மாநில அரசு அதிகாரிக்கு இருக்கும் அதிகாரம் மந்திரி, வக்கிலுக்கு கிடையாது.


தமிழ்வேள்
அக் 07, 2024 20:41

மெத் வியாபார விவரம் முழுவதும் பெத்துமா நாயகருக்கு மிகவும் நன்றாக தெரியும் என்பதும் அண்ணன் அமைச்சர் அவர்களுக்கு தெரியும் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்வது காலத்தின் கட்டாயம்.. என்ன அமைச்சரே.. சரிதானே நான் சொல்றது?


Ramesh Sargam
அக் 07, 2024 20:40

போதைப்பொருள் நடமாட்டம் என்பது அவதூறு. ஆம், அது ஆட்சியில் உள்ளவர்கள் ஆதரவால் நடக்கும் விநியோகம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 07, 2024 19:51

கடைகளில் மிரட்டி வசூல் செய்தது திராவிட மாடலின் அந்தக்கால பழக்கம் .... அது மலையேறிவிட்டது ..... பிறகு தொழிலதிபர்களிடம் .... இவையெல்லாம் போதாதென்று போ பொருள் பிசினஸில் கைவைத்துள்ளனர் ..... எப்போதுமில்லாத அளவு ஆண்மை இழப்பு / மலட்டுத்தன்மை, கருத்தரிக்க இயலாமை பிரச்னைகளும், அவற்றுக்கான மருத்துவர்கள் / மருத்துவமனைகள் / லேப்கள் பல்கிப்பெருகியுள்ளன ..... மாணவ, இளைஞர் பருவத்திலேயே இப்பழக்கத்துக்கு அடிமைகள் ஆகிவிடுகிறார்கள் ....


Amar Akbar Antony
அக் 07, 2024 19:16

என்றாவது திருடனோ தெரிந்தே குற்றம் செய்பவனோ செய்த குற்றத்தையோ செய்கின்ற திருட்டையோ ஒத்துக்கொண்டதாக சரித்திரமில்லை கஞ்சா மற்றும் இதர போதைப்பொருட்கள் சரளமாக அதை உபயோகிப்பவர்களுக்கு கிடைக்கிறது ஒருவேளை அமைச்சர் பொதுமக்களில் அவற்றை பயன்படுத்தாத வர்களுக்கு கிடைப்பதில்லையல்லவா அதைத்தான் கூறுகிறார் தற்போது சிகரெட் கிடைப்பதைப்போல் போதைப்பொருட்கள் கிடைப்பதில்லை அந்த ஆதங்கத்தில் அமைச்சர் சொல்கிறாரோ


புதிய வீடியோ