உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலணி வீசிய வழக்கறிஞர் நீக்கம்

காலணி வீசிய வழக்கறிஞர் நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின், 71, உறுப்பினர் பதவியை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நேற்று அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, வழக்கு விசாரணைக்காக சமீபத்தில் கூடியது. அப்போது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், காலில் அணிந்திருந்த காலணியை திடீரென கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீசினார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், காலணி வீசிய வழக்கறிஞரை கைது செய்தனர். தலைமை நீதிபதி விடுவிக்க சொன்னதால், விடுவித்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் நேற்று கூடியது. அப்போது, தலைமை நீதிபதி மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ராகேஷ் கிஷோர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ