உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி கார் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

டில்லி கார் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடி இரங்கல்

டில்லி கார் குண்டுவெடிப்பில் உறவினர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவுகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகளுடன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன்.

காங்கிரஸ் எம்பி ராகுல்

டில்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேசன் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் மனதை நொறுங்கச் செய்கிறது. கவலையளிக்கிறது. அப்பாவி மக்கள் உயிரிழந்தது கவலையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் , உறவினர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

காங்கிரஸ் எம்பி பிரியங்கா

டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்தது மனதை நொறுங்கச் செய்கிறது. அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். அவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்

டில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பல அப்பாவி உயிர்களை பலிகொண்டதால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அங்கிருந்து வரும் காட்சிகள் மனதை உடைக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்

அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்

டில்லி செங்கோட்டையில் ஏற்பட்ட சம்பவத்தில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பரிதாபாத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசும், போலீசாரும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால்

டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்த சம்பவம் அபாயகரமானது. சிலர் உயிரிழந்துள்ளதாக வரும் தகவல்கள் சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்தும், பின்னால் சதி ஏதும் உள்ளதா என்பது குறித்தும் மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும். டில்லியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்ட முடியாது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

டில்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் நினைவாக எனது எண்ணம் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்

ஒடிசா முன்னாள் முதல்வர் நவின் பட்நாயக்

டில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு குறித்து அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்கள் நினைவாக எனது எண்ணம் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்

டில்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

டில்லி முதல்வர் ரேகா குப்தா இரங்கல்

செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் மிகவும் வேதனையானது மற்றும் கவலையளிக்கிறது. இந்த துயர விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. டில்லி காவல்துறை, என்எஸ்ஜி, என்ஐஏ மற்றும் எப்எஸ்எல் குழுக்கள் முழு வழக்கையும் முழுமையாக விசாரித்து வருகின்றன.டில்லி மக்கள் அனைவரும் வதந்திகளைத் தவிர்த்து அமைதியைக் காக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல்

டில்லியில் இன்று மாலை நடந்த துயரமான குண்டுவெடிப்பில் உயிர் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி