உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதி ஆக பதவியேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து

துணை ஜனாதிபதி ஆக பதவியேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இன்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் விவரம்: ஜனாதிபதி திரவுபதி முர்முதுணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுகள். பொது வாழ்க்கையில் உள்ள நீண்ட அனுபவம் , நாட்டின் வளர்ச்சிக்கு பயனளிக்கும். வெற்றிகரமான பதவிக்காலத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.https://x.com/rashtrapatibhvn/status/1965423192056750590

பிரதமர் மோடி

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். சமூகத்திற்கு சேவை செய்வதற்கும், ஏழைகள் அதிகாரம் பெறுவதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, பார்லிமென்ட் விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என நம்புகிறேன்.https://x.com/narramodi/status/1965425416245510212 துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனை டில்லியில் அவர் தங்கியுள்ள இடத்துக்கே வந்து சந்தித்து பிரதமர் மோடிவாழ்த்து தெரிவித்தார் .

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து எழுந்த ஒரு தலைவராக உங்கள் நுண்ணறிவும், நிர்வாகத்தைப் பற்றிய ஆழமான அறிவும் நமது பார்லிமென்ட் ஜனநாயகத்தில் சிறந்ததை வெளிக் கொணர்ந்து ஒதுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் எங்களுக்கு உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.ராஜ்யசபாவின் புனிதத்தின் பாதுகாவலராக உங்கள் பயணத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.https://x.com/AmitShah/status/1965419469037334570

முதல்வர் ஸ்டாலின்

துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியலமைப்பு கட்டமைப்பு மற்றும் நமது நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளை அவர் உறுதியுடன் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். இந்தியாவின் ஜனநாயகத்தின் உணர்வை நிலைநிறுத்தி நாம் பின்பற்றும் கொள்கைகளை பிரதிபலிக்கும் உறுதியான போராட்டத்துக்காக சுதர்சன் ரெட்டியையும் நான் பாராட்டுகிறேன். https://x.com/mkstalin/status/1965445284802216410

அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்

துணை ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். பா.ஜ., கட்சியின் மூத்த தலைவராகவும், எம்பி ஆகவும் பல்வேறு மாநிலங்களின் கவர்னராகவும் திறம்படப் பணியாற்றிய அவர்தம் பொதுவாழ்விற்கும், தொடர் அர்ப்பணிப்போடு அவராற்றிய மக்கள் சேவைக்கும், இப்பதவி மிக சிறந்த அங்கீகாரம் ஆகும். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகத் தேர்வு செய்தமைக்கு பிரதமர் மோடிக்கும், பாஜ தலைவர் நட்டாவுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். துணை ஜனாதிபதி பொறுப்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

https://x.com/EPSTamilNadu/status/1965424694108315949

பாமக அன்புமணி

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் புதிய உயரங்களைத் தொட வேண்டும்.இந்தியாவின் 15-ஆம் துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றிருப்பது மக்கள் பிரதிநிதிகள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அவருக்கு பாமக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்றாவது துணை ஜனாதிபதியான சி.பி. ராதாகிருஷ்ணன், தமது சிறப்பான பணியின் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறேன். அரசியலமைப்புச் சட்டப் பதவிகளில் அவர் புதிய உயரங்களைத் தொடுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.https://x.com/draramadoss/status/1965423059650895928இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
செப் 10, 2025 12:02

டம்மி பதவி தமிழருக்கு, அதிகாரம் மிக்க பதவி குஜராத்திக்கா? இதற்கு தான் இத்தனை ஆர்ப்பாட்டமா?


பாலாஜி
செப் 10, 2025 07:55

பாஜகவின் பணம் கட்சி மாறி வாக்களித்தவர்களை விலைக்கு வாங்கியது தெரிகிறது.


Nandakumar
செப் 10, 2025 07:45

வோட்டிங் machine ஏன் பயன்படுத்தப்படவில்லை? இதில் தானே அதன் பயன் சரியாக தெரியும்.


பேசும் தமிழன்
செப் 10, 2025 07:30

இண்டி கூட்டணி ஒரு ஆளை பலிக்கடாவாக ஆந்திராவில் இருந்து கொண்டு வந்தார்களே.. அவருக்கும்.... இண்டி.... கூட்டணி ஆட்களுக்கும்.... மீண்டும்.... மீண்டும் தோல்வியடைய வாழ்த்துக்கள்.. வந்தே மாதரம்......ஜெய்ஹிந்த் !!!


பேசும் தமிழன்
செப் 10, 2025 07:27

விடியல் தலைவர் கட்சி ஆட்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள்.. வாழ்த்து சொல்ல வந்துட்டார்.. தமிழருக்கு ஓட்டு போடாத திராவிடர்களுக்கு.. தமிழர்கள் ஓட்டு கிடையாது.. வரும் தேர்தலில் இதனை கண்கூடாக பார்க்கலாம்.


thulasiraman h
செப் 10, 2025 07:08

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்


Shivakumar
செப் 10, 2025 03:27

துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட சி.பி.ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு இந்தியன் என்ற முறையில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க ஜனநாயகம்.


Ramesh Sargam
செப் 10, 2025 03:06

இதில் கொடுமை என்னவென்றால், அவருக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ், திமுக Indi கூட்டணியினரும் அந்த பதவிக்காக அவரை வாழ்த்துவதுதான். ஏன் தோற்றுப்போன ரெட்டிகாரும் அவரை வாழ்த்துவார் .


Sivaram
செப் 09, 2025 22:51

சும்மா நாடகம் செய்யாமல் மனதார வாழ்த்து சொல்லுங்கள் எல்லோரும்


Sivaram
செப் 09, 2025 22:21

துணை ஐனாதிபதி ஐனநாயக உணர்வுடன் கடமை ஆற்ற விழைகிறேன் என்று சொல்லி விட்டாரய்யா. உடன்பிறப்பே அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா அப்பா


முக்கிய வீடியோ