உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான நிலையத்தில் சிறுத்தை நடமாட்டம்

விமான நிலையத்தில் சிறுத்தை நடமாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசாவின் புவனேஸ்வர் விமான நிலைய வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பெண் ஒருவர் கூறியதையடுத்து, அங்கு வனத்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில், பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம் உள்ளது; இதன் அருகே வனப்பகுதி உள்ளது.விமான நிலையத்தில் துப்புரவு பணி செய்யும் பெண் தொழிலாளர் ஒருவர், சிறுத்தை ஒன்றை நேற்று காலை பார்த்ததாக உயரதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதையடுத்து, அந்த பகுதியில், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து விமான நிலையம் முழுதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும், இந்த தேடுதல் வேட்டையில் சிறுத்தை சிக்கவில்லை. சில இடங்களில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JeevaKiran
அக் 28, 2024 15:50

பக்கத்தில் அடர்ந்த வனம் என்றால், விமான நிலையமும் காட்டை ஆக்ரமித்து கட்டப்பட்டதுதான்? அப்போ வனவிலங்குகள் வரத்தான் செய்யும்.


Lion Drsekar
அக் 27, 2024 12:28

தயவு செய்து சிறுத்தைக்கு பெயரை மாற்றுங்கள். புள்ளிப்புலி என்று பெயரை மாற்றுங்கள் இப்போது அந்த பெயர் மனிதர்கள் மற்றும் அவர்கள் ஆர்ந்த கட்சிக்கு வந்துவிட்டதால் இனி வேறு பெயரில் அழைக்கவேண்டும், உலகளவில் dotedtiger என்று அழைக்கப்படவேண்டும் . வந்தே மாதரம்


பாமரன்
அக் 27, 2024 09:38

வனவிலங்குகள் வாழும் இடத்தை நாம் ஆக்கிரமித்து விட்டு அதுக வருதுன்னு கம்ப்ளைண்ட் பண்றோம்... காமெடியா இல்லை...??


J.V. Iyer
அக் 27, 2024 05:12

ரொம்பவும் குருமாவை கிண்டல் செய்யாதீங்க. தமிழகத்தில்தான் நடமாட்டம் அதிகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை