உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாடம் கற்கவில்லை!

பாடம் கற்கவில்லை!

ஹரியானா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை. தேர்தல் ஆணையம் மீது அவதுாறு பரப்பினர். இதன் வாயிலாக தோல்வியிலிருந்து காங்கிரஸ் பாடம் கற்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர், பா.ஜ.,

இது நியாயம் தானா?

அரசு நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை தாக்கி பேசுவதை பிரதமர் வழக்கமாக வைத்துள்ளார். மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் நிகழ்ச்சியை, எதிர்க்கட்சிகளை தாக்கி பேசுவதற்கு பயன்படுத்துவது நியாயமா?பவன் கெரா, மூத்த தலைவர், காங்கிரஸ்

கட்டுக்கதை தகர்ந்தது!

'இண்டி' கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சியினர், பா.ஜ.,வுக்கு எதிராக தொடர்ந்து கட்டுக் கதைகளை பரப்பி வந்தனர்; நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என முழங்கினர். ஆனால், ஹரியானாவில் பா.ஜ., வெற்றி பெற்றதும் கட்டுக்கதைகள் தகர்ந்து விட்டன. தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிரா துணை முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ