உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறுதிச்சடங்கில் பங்கேற்ற லஷ்கர் பயங்கரவாதிக்கு வலை!

இறுதிச்சடங்கில் பங்கேற்ற லஷ்கர் பயங்கரவாதிக்கு வலை!

ஸ்ரீநகர்: ராணுவத்தினரின் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதியின் இறுதிச் சடங்கில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி கலந்து கொண்ட விவரம் வெளியாகி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒடுக்கும் நோக்கில் ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கைகளை ராணுவம் செயல்படுத்தி வருகிறது. 2 நாட்கள் முன்பு இந்திய ராணுவத்தினர், பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதியான தாகிர் ஹபாப் என்பவனை சுட்டுக் கொன்றனர்.இந் நிலையில், தாகிர் ஹபாப் இறுதிச்சடங்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலாகோட் பகுதியில் உள்ள காய்கலாவில் நடந்ததாக தெரிகிறது. இந்த இறுதிச்சடங்கின் போது, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதியான ரிஸ்வான் ஹனிப் கலந்து கொண்ட விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.ஆனால் இந்நிகழ்வில் ரிஸ்வான் ஹனிப் பங்கேற்க, கொல்லப்பட்ட தாகிர் ஹபாப் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததாகவும், ஆனால் துப்பாக்கி முனையில் அனைவரையும் மிரட்டி அவன் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அதே சமயம், இறுதிச்சடங்கில் ரிஸ்வான் ஹனிப் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Natarajan Ramanathan
ஆக 04, 2025 02:17

இந்தமாதிரி தீவிரவாதிகளை இந்திய ராணுவம் புதைக்கும்போது அவனோடு ஒரு பன்றி உடலையும் புதைத்து மரியாதை செலுத்த வேண்டும்.


Vishnu Vijay
ஆக 03, 2025 22:37

Please read news properly before commenting. The killed terrorist pigs body will be buried in some unknown grave in J&K. His last rights was done in Rawalakot, which is in PoK, in which the other guy Hanif has participated. Please know what you are commenting before saying things.


sasikumaren
ஆக 03, 2025 21:39

எதிரிகளின் மரணம் எதிரிகளுக்கு புரிய வேண்டும் தெரிய வேண்டும் இவனையும் கொன்று புகைப்படங்களை எதிரி நாட்டுக்கு அனுப்பி வேண்டும்


Ramesh Sargam
ஆக 03, 2025 20:32

இறுதிச்சடங்கில் பங்கேற்ற லஷ்கர் பயங்கரவாதியின் இறுதிச்சடங்கு எப்போது?


Sridhar
ஆக 03, 2025 18:20

அவனுக்கு எதற்கு இறுதிச்சடங்கு? வெளிநாட்டு பயங்கரவாதி நம் நாட்டுக்குள் ஊடுருவி அவ்வளவு பேரை இரக்கமின்றி கொலை செய்திருக்கிறான். அவனை ஒசாமாபின்லேடனை போல் சின்னாபின்னமாக சிதைக்காமல் அவன் உடலை மரியாதை செய்வதற்கு யார் அனுப்பினார்கள்? அவன் இருந்த இடம் காஷ்மீர் தானா? பாக்கிஸ்தான் இல்லையா? என்ன நடக்குதுன்னு புரியவே இல்ல.


நிக்கோல்தாம்சன்
ஆக 03, 2025 17:11

இப்படி கொல்லப்படும் பயங்கரவாதிகளின் மீது ........... தெளிக்கப்படவேண்டும்