உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறையில் இருந்து அரசை நடத்துவது சரியானதா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்: அமித் ஷா

சிறையில் இருந்து அரசை நடத்துவது சரியானதா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்: அமித் ஷா

புதுடில்லி: 'அரசியல்வாதிகள் சிறையில் இருந்துகொண்டு அரசு நடத்துவது சரியானதா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும்,' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.அரசு பதவியில் இருக்கும் பிரதமர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jkecpz6k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக அமித் ஷா பதிவிட்டுள்ளதாவது:நமது நாட்டில் அரசியல் ஊழலுக்கு எதிரான மோடி அரசின் உறுதிப்பாட்டையும் பொதுமக்களின் சீற்றத்தையும் கருத்தில் கொண்டு, இன்று லோக்சபா சபாநாயகரின் ஒப்புதலுடன் நாடாளுமன்றத்தில் ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினேன். அரசாங்கத்தை நடத்த முடியாது:இது பிரதமர், முதல்வர் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் போன்ற முக்கியமான அரசியலமைப்பு பதவிகளில் இருப்போர், சிறையில் இருக்கும்போது அரசாங்கத்தை நடத்த முடியாது என்பதை உறுதி செய்கிறது.அரசியல் சட்டம் உருவாக்கியவர்கள், இப்படி ஒரு சூழ்நிலை எதிர்காலத்தில் வரும் என்று கற்பனை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் சமீப காலத்தில், கைது செய்யப்படும் முதல்வர்கள் சிறையில் இருந்தபடி ராஜினாமா செய்யாமல் அரசை நடத்தும் மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது.பதவி நீக்கம்:இந்த மசோதாவின் நோக்கம் பொது வாழ்வில் குறைந்து வரும் ஒழுக்கத்தின் அளவை உயர்த்துவதும் அரசியலுக்கு ஒருமைப்பாட்டைக் கொண்டுவருவதும் ஆகும். கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எந்த ஒரு நபரும், பிரதமர், முதலமைச்சர் அல்லது மத்திய அல்லது மாநில அரசின் அமைச்சராக ஆட்சி செய்ய முடியாது.இந்த சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதி கைது செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஜாமின் பெற வேண்டும். 30 நாட்களுக்குள் ஜாமின் பெறத் தவறினால், 31வது நாளில், அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் அல்லது பதவிக்கு தகுதியற்றவர்களாகி விடுவர்.சட்ட நடைமுறைக்குப் பிறகு அத்தகைய தலைவருக்கு ஜாமின் வழங்கப்பட்டால், அவர்கள் மீண்டும் தங்கள் பதவியைத் தொடரலாம்.இப்போது, ஒரு அமைச்சர், முதல்வர் அல்லது பிரதமர் சிறையில் இருக்கும்போது அரசாங்கத்தை நடத்துவது சரியானதா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும்.பதவி ஏற்கவில்லை:இன்று காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், எனக்கு எதிராக தனிப்பட்ட ஒரு கருத்தை தெரிவித்தார். நான் கைது செய்யப்பட்டபோது ராஜினாமா செய்யவில்லை என்றார்.உண்மை என்னவெனில், நான் கைது செய்யப்படுவதற்கு முன்னரே ராஜினாமா செய்து விட்டேன். ஜாமினில் வந்த பிறகும் கூட, நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்படும் வரை எந்த பதவியையும் ஏற்கவில்லை.என் மீதான வழக்கை, அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அத்வானி மீது குற்றச்சாட்டு எழுந்தபோதும் அவர் ராஜினாமா செய்தார். ஆனால், காங்கிரஸ், இந்திரா தொடங்கிய அறம் இல்லாத செயல்களை இன்று தொடர்கிறது.லாலுவை காப்பாற்றுவதற்காக சட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ். அதை எதிர்த்த ராகுல், இன்று அதே லாலுவுடன் குலாவிக் கொண்டிருக்கிறார். பொதுமக்கள் இந்த பொய்யான நிலைப்பாட்டை புரிந்து கொண்டிருக்கின்றனர்.மசோதா எதிர்ப்பு;இந்த மசோதா, பார்லி கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் அனைவரும் ஊழல்வாதிகளை காப்பாற்றும் நோக்கத்துடன் ஒன்று சேர்ந்து இந்த மசோதாவை எதிர்க்கின்றனர். இதன் மூலம் அவர்கள் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கின்றனர்.இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

baala
ஆக 30, 2025 10:46

இங்கு பணம் வாங்கி கொண்டு கூவுபவர்கள் கருத்துக்கள் அதிகம் பதிவிட படுகின்றன என்கிற சந்தேகம் வருகிறது.


venugopal s
ஆக 21, 2025 13:57

சட்டம் என்னவோ நல்ல சட்டம் தான், அதைப் பயன்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையே! அது தானே பிரச்சினையே!


Tamilan
ஆக 20, 2025 23:27

அமித் சா சிறையில் இருக்கவில்லையா ? சிறைக்கு போக ஆசையா?


Tamilan
ஆக 20, 2025 23:24

சிறையிலிருந்த இந்து மத காப்பிய கதாநாயகர்களின் மதம் நாட்டுக்கு தேவையா என்பதையும் மக்கள் முடிவு செய்வார்கள்


vivek
ஆக 21, 2025 08:13

மக்கள் முடிவு செய்யட்டும்...


Ramesh Sargam
ஆக 20, 2025 22:20

நாட்டு மக்களின் நலனுக்காக சிறை சென்றிருந்தால் அது பரவாயில்லை. ஆனால் ஊழல், குற்றங்கள் பல செய்து மக்களை சுரண்டி தின்று சிறை சென்றிருந்தால், அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது.


Ramesh Sargam
ஆக 20, 2025 22:18

சரியில்லை. அதெப்படி சிறை சென்ற ஒரு குற்றவாளி நாட்டை, மாநிலத்தை ஆளமுடியும்?


மனிதன்
ஆக 20, 2025 21:06

பிரக்யா சிங்கிற்கு பதவி கொடுத்தபோது இனித்ததோ???


rama adhavan
ஆக 20, 2025 23:27

அந்த சன்யாசி ஜாமீனில் வந்து பின்பு தான் உறுப்பினர். Tharpodhu வழக்கும் தள்ளுபடி ஆகிவிட்டது. அவர் மந்திரியும் இல்லை. இந்த பாராளுமன்றத்திலேயே காஷ்மீரில் வென்ற சிறையில் உள்ள எம் பி பதவி ஏற்றுள்ளார். தற்போதைய சட்ட வடிவம் மந்திரியாக உள்ளவர்களுக்குதான்.


அப்பாவி
ஆக 20, 2025 20:32

உங்க ஆளுங்களும் சிறை செல்லும் நாள் வரும்.


Karthik Madeshwaran
ஆக 20, 2025 20:28

30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு என்பது பாஜக, எதிர்க்கட்சிகளின் மீதான பழிவாங்குதல் அல்லது அடக்குமுறை.. ஊழல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருப்பவர் குற்றவாளி அல்ல. அவர் குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. தீர்ப்பு வரும்வரை பொறுமை காக்க தான் வேண்டும். நாளை குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி என்று தீர்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள் ? அவருக்கான அநீதிக்கு யார் பொறுப்பு ? ஒரு நிரபராதியை தண்டிப்பது தவறுதானே ? இந்து தர்மமே இதை ஏற்காதே ??


Rathna
ஆக 20, 2025 20:18

அரசியல் திருடர்கள் பல பேர் நிலைமை, பெண்கள் விஷயத்தில், கூலி கொலைகளில், பொருளாதார குற்றங்களில், மனிதாபிமானம் இல்லாத குற்றங்களில் முதன்மையாக இருக்கிறது. இதை மாற்ற வேண்டியது தேவை. MP, MLA கோர்ட் வழக்குகளுக்கு கால நிர்ணயம் நிர்ணயிப்பது அவசியம். இதை தவிர தன்னைத்தானே யோக்கியமான கட்சி என்று சொல்லி கொண்டு அரசியல் அமைப்பு புத்தகத்தை தூக்கி காமிப்போர், இதை ஆதரிப்பது தானே முறை?


புதிய வீடியோ