உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் கமிஷனை பாதுகாப்போம்!

தேர்தல் கமிஷனை பாதுகாப்போம்!

ஒவ்வொரு ஆண்டும் ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நம் நாட்டின் தேர்தல் கமிஷனின் மாண்பு சிதைக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்தவும் தேர்தல் கமிஷனின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்

பொய்யில் வித்தகர்!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுகிறது. ஆனால், டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாமல், மீண்டும் பொய் வாக்குறுதிகளை வழங்குகிறார். அவரை போல் தெளிவாக பொய் பேசும் நபரை நான் பார்த்தது இல்லை.அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

ஓட்டுக்களை விற்காதீர்!

பணம் அல்லது பரிசுப்பொருள் தந்து ஓட்டுகளை வாங்க முயற்சிப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். ஓட்டுரிமையை ஒருபோதும் விற்கக் கூடாது. உங்கள் ஓட்டு, நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. சரியானவர்களை தேர்வு செய்யுங்கள். அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முன்னாள் முதல்வர் ஆம் ஆத்மி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜன 26, 2025 06:42

முறைதவறி பிறந்தவர்கள் தான் பெண்களை இழிவுபடுத்தி பேசுவார்கள் அவர்களை பற்றி உங்களின் கருத்து ?


முக்கிய வீடியோ