உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து மொழிகளையும் மதிப்போம்: ஹிந்தி தினத்தில் அமித் ஷா கருத்து

அனைத்து மொழிகளையும் மதிப்போம்: ஹிந்தி தினத்தில் அமித் ஷா கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:'ஹிந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் மதித்து, தன்னம்பிக்கை நிறைந்த வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி முன்னேறுவோம்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாடு முழுதும் செப்., 14ம் தேதி ஹிந்தி மொழி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: நம் நாடு, அடிப்படையில் மொழி சார்ந்ததாகும். கலாசாரம், வரலாறு, மரபுகள், அறிவு, அறிவியல், தத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றை தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்து செல்லும் சக்திவாய்ந்த ஊடகமாக நம் மொழிகள் உள்ளன. ஒவ்வொரு சூழலிலும், மனிதன் ஒழுக்கத்துடனும், ஒற்றுமையாக முன்னேறவும் மொழிகள் வழிகாட்டியுள்ளன. 'ஒன்றாக நடப்போம், ஒன்றாகச் சிந்திப்போம், ஒன்றாகப் பேசுவோம்' என்பது நம் மொழியியல் கலாசார உறவின் மைய மந்திரமாக உள்ளது. திருவள்ளுவரின் கருத்துகள், தெற்கில் ஆர்வத்துடன் படிக்கப்படுவதைப் போல் வடக்கிலும் போற்றப்படுகிறது. சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் ஒவ்வொரு பிராந்திய இளைஞர்களிடமும் தேசிய பெருமையைத் துாண்டுகின்றன. ஹிந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் மதித்து, தன்னம்பிக்கையை வளர்த்து, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி முன்னேறுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Iyer
செப் 15, 2025 04:09

ஹிந்தி நாட்டில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி ஆகும். தமிழ் நாடு தவிர - பாக்கி எல்லா ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் - ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழ் நாடு தவிர பாக்கி எல்லா - ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் - ஓரளவு ஹிந்தி பேசுகிறார்கள். உள்நோக்கு கொண்ட ஊழல் அரசியல்வாதிகள் தமிழர்களை ஹிந்தி கற்கவிடாமல் செய்கிறார்கள்.


Kasimani Baskaran
செப் 15, 2025 04:01

திராவிடர்கள் பேசும் திராவிட மொழியை மதிக்க வேண்டும். அப்படியே தெலுங்கர்களுக்கு என்று ஒரு மாநிலம் அமைத்து தமிழகத்தை இரண்டாக பிரித்து விட்டால் அவர்கள் தனியாக திராவிடர்களை மட்டும் முன்னேற்ற வசதியாக இருக்கும். தமிழர்கள் உண்மையான தமிழகத்தை முன்னேற்றலாம்.


spr
செப் 15, 2025 03:06

செப்டெம்பர் 14 ஹிந்தி மொழி தினமானால், அனைத்து மொழிகளையும் மதிக்கும் மத்திய அரசு பிற மாநில மொழிகளுக்கு எந்த நிஹால் விழா எடுக்கும்? அனைத்து மொழிகளையும் "மிதிப்போம்" என்பதற்கு பதிலாகத் தவறுதலாக "மதிப்போம்" என்று சொல்லிவிட்டாரோ


நிக்கோல்தாம்சன்
செப் 15, 2025 02:50

எல்லாரும் உங்களை போன்று இருந்துவிட்டால் சகோதரத்துவம் பெருகிடும் , பெற்ற மகளையே காம கண்ணோடு பார்க்கும் கழகங்களில் எனது மொழியே "அப்பா " மொழி என்று அலையும் அறிவிலிகளால் தான் சிக்கலே , அவரவர் எல்லையில் அவரவர் மொழியை வளர்த்து கொண்டிருந்தாள் எந்த பிரச்னையும் வராது , காம களியாட்டம் போடும் ஒருவன் வந்து எனது மொழிதான் சிறந்தது என்று சர்வாதிகாரம் செய்ய நினைக்கையில் முதலில் அவனது நடவடிக்கைகளை வைத்து அவனது மொழியும் எடை போடப்படுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை