உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா போன்ற வீட்டில் ஒரு சிறிய அறை தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் : ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு

இந்தியா போன்ற வீட்டில் ஒரு சிறிய அறை தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் : ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இந்தியா போன்ற ஒரு வீட்டில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது ஒரு சிறிய அறை தான். அன்னியர்கள் ஆக்கிரமித்த அந்த அறையை, நாம் திரும்ப பெற வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:இந்நிகழ்ச்சியில் பல சிந்தி சகோதரர்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை; பிளவுபடாத இந்தியாவுக்கு சென்றனர். அந்த வீடும், இந்த வீடும் வேறுபட்டவை அல்ல. இந்தியா முழுதும் ஒரே வீடு தான். ஆனால் யாரோ சிலர், வீட்டில் இருந்த ஓர் அறையை ஆக்கிரமித்து உள்ளனர். அதில் தான், மேஜை, இருக்கை, ஆடைகளை வைத்திருந்தேன். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அந்த அறையை, நாளையே நாம் மீண்டும் கைப்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை, 'ஓர் அறை' என மோகன் பகவத் குறிப்பிட்டு பேசிய போது, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆரவாரமாக கைதட்டினர். கடந்த சில நாட்களாக, ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாக்., அரசுக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மோகன் பகவத்தின் இந்த பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
அக் 05, 2025 22:00

விடுதலையின்போது பாகிஸ்தானை பிரிக்காமல் விட்டிருந்தால் இப்போது அவர்கள் மெஜாரிட்டியாகி இங்கு (ஐ எஸ் ஸ்டைல்? ) ஆட்சியைப் பிடித்திருப்பர். ஆர்எஸ்எஸ் இயக்கமே ஒழிக்கப்பட்டிருக்கும். அப்போதும் ஹிந்து மக்களுக்கு சுரணை வந்திருக்காது. அது சரி பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி மக்களை என்ன செய்வது? அவர்கள் இந்தியாவுக்கா விசுவாசமாக இருப்பார்கள்?. நடக்கவே நடக்காது.


N Annamalai
அக் 05, 2025 21:52

உலக அளவில் இந்தியாவிற்கு இது சிக்கலை கொடுக்கும் .அவர்கள் யோசிக்கும் முன் செய்து விட வேண்டும் .


Rajamani K
அக் 05, 2025 21:14

முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் குழப்பம் தான்


புதிய வீடியோ