உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு 6 ஆண்டு தடை போதுமானது: மத்திய அரசு பதில்

தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு 6 ஆண்டு தடை போதுமானது: மத்திய அரசு பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் தடை யே போதுமானது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கவேண்டும். நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3fok1lu0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மனுவிற்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ் நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்பது கடுமையானது. ஆறு ஆண்டுகள் தடையே போதுமானது. வாழ் நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற கேள்வி பார்லிமென்டின் அதிகார வரம்பில் வருகிறது.விகிதாசாரம் மற்றும் நியாயத்தன்மையின் கொள்கைகளை கருத்தில் கொண்டு தகுதி நீக்கத்திற்கான காலத்தை பார்லிமென்ட் முடிவு செய்கிறது.தடையை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம், தடை உறுதி செய்யப்படுவதுடன், தேவையற்ற கடுமை தவிர்க்கப்படும். சட்டங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று மட்டுமே சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ய முடியும். ஆனால் , மனுதாரரின் கோரிக்கைப்படி வாழ்நாள் தடை விதிக்க முடியாது. தகுதி நீக்க காலத்தை முடிவு செய்ய பார்லிமென்டிற்கு தான் அரசியலமைப்பு அதிகாரம் அளித்து உள்ளது. தகுதி நீக்கத்திற்கான காரணத்தையும், அதற்கான கால அளவையும் தீர்மானிக்கும் அதிகாரம் பார்லிமென்டிற்கே உள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Haja Kuthubdeen
பிப் 27, 2025 09:45

எல்லா சட்டங்களும் காங்கிரஸ் காரன் இயற்றியது தீங்கானது மாற்றனும் என்று கதறும் திடீர் தேசபக்தர்கள் இதற்கு என்ன காரணம் கண்டுபிடிப்பார்கள்.


Haja Kuthubdeen
பிப் 27, 2025 09:43

சீனாவில் அரசியல்வாதிகள்..குறிப்பா ஆளும் வர்க்கம் ஊழலில் ஈடுபட்டு நிரூபணம் ஆணால் மரண தண்டனை என்று படித்துள்ளேன். அந்த அளவு இல்லை என்றாலும் அட்லீஸ்ட் இவனுங்க தேர்தலிலேயே நிற்க கூடாது என்று கட்டுப்படுத்தலாமே. குடிமக்களுக்கு மட்டும்தான் அனைத்து சட்டங்களா???


Haja Kuthubdeen
பிப் 27, 2025 09:38

நாளை நாமலும் மாட்டிகிட்டா என்ன செய்வது என்ற பயமோ என்னவோ????இந்தியாவிற்கு மிக முக்கியமான தேவையான சட்டமே இந்த அரசியல்வாதிகளின் நேர்மை தகுதி வயதுதான்.மற்ற எல்லாவற்றையும் விட அதி முக்கியமானது.காரணம் நாட்டின் வளர்ச்சி பொருளாதாரம் குடிமக்களிள் வாழ்க்கையே இவர்கள் கையில்தான்.தேவையில்லாத சட்டங்களை இயற்ற காட்டும் ஆர்வத்தை இதில் மட்டும் பிஜெபி காட்ட மறுப்பது ஏனோ????


Laddoo
பிப் 27, 2025 08:26

தவறான கொள்கை. உடனடி பரிசீலனை. அரசியல்வாதிகள் தண்டனை பெற்றால் அவர்களின் குடும்பமோ வாரிசுகளோ எந்த காலத்துக்கும் சொத்து வாங்கக் கூடாது மற்றும் எந்த பொறுப்பிலும் இருக்கக் கூடாது. பாஸ்போர்ட் முடக்கம்.


naranam
பிப் 27, 2025 08:21

இதை மரண தண்டனை குற்றமாகக் கருதிக் குறைந்தபட்சம் 14 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்.


தமிழன்
பிப் 27, 2025 00:38

ஒரு திருடன் இன்னொரு திருடனுக்குத்தான் சிபாரிசு செய்வான்


Laddoo
பிப் 27, 2025 10:36

சிங்கப்பூர் போல 20 பிரம்படி ...


aaruthirumalai
பிப் 26, 2025 23:00

விட்டுக்கொடுக்காத திருட்டுபய கொள்கை.


Ramesh Sargam
பிப் 26, 2025 21:57

கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கவேண்டும். இது நியாயமான கோரிக்கைதான். அதாவது ஆறு ஆண்டு தண்டனைக்கு பிறகு அவர்கள் திருந்தினால் ஆறு ஆண்டு தடை போதுமானது. ஆறு ஆண்டுகளுக்கு பின்னும் அவர்கள் திருந்தவில்லையென்றால் வாழ்நாள் முழுவதும் தடை. இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.


Haja Kuthubdeen
பிப் 27, 2025 14:06

நம்நாட்டில் உடனடியாக தீர்ப்பு வந்துவிடாது. வழக்கு முடிந்து தீர்ப்பு வர குறைந்தது பத்தாண்டுகள் மேல் முறையீடு அது இதுண்னு மேலும் பல வருசம். குற்றம் செய்து தண்டனை பெற்றவன் மீண்டும் செய்து அதற்கு தீர்ப்பு வர இன்னும் 20 ஆண்டுகள். இதெல்லாம் சாத்தியமா.. தப்பிக்க.. நம்மை மீண்டும் அதிகாரம் செய்யவே பயன்படும். குற்றம் நீரூபணம் ஆகி அவனுக்கு 3மாசம் தண்டனை கொடுத்தாலே தகுதி நீக்கம் செஞ்சிடனும். அதென்ன 2வருச கால அளவு...அனைத்து காங்கிரஸ் கொண்டுவந்த சட்டங்களையெல்லாம் திருத்தும் பிஜெபி அரசியல் கட்சி தலைவர்கள் சம்பந்த பட்ட சட்டத்திற்கு மட்டும் இதை பாராளுமன்றம்தான் முடிவு செய்யனும் என்று கூறுவது என்ன காரணத்திற்காக...திடீர் தேச பக்தர்களின் நிலை என்ன?????


Barakat Ali
பிப் 26, 2025 21:39

கட்சி வேறுபாடு இன்றி அனைத்துக் கட்சிகளும் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கொண்டுள்ளன என்பதை நிரூபித்துள்ளன .....


Haja Kuthubdeen
பிப் 27, 2025 12:54

இப்பதான் சரியான திசை வந்துள்ளீர்கள்.


Jay
பிப் 26, 2025 20:24

தண்டனை பெற்ற பின்பும் அரசியல்வாதிகள் ஜெயிலுக்கு போகிறார்களா என்று சந்தேகம். பொன்முடியார் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். ஆனால் அவர் ஜெயிலுக்கெல்லாம் போகவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை