உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலவர வழக்கில் 98 பேருக்கு ஆயுள்

கலவர வழக்கில் 98 பேருக்கு ஆயுள்

கொப்பால்: தலித் காலனியில் குடிசைகள் மீது தீ வைத்த, கலவர வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சம்பவம் நடந்த 10 ஆண்டுகளுக்கு பின், கொப்பால் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.கொப்பால் கங்காவதி மரகும்பி கிராமத்தில், தலித் சமூகத்தினருக்கும், இன்னொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் பல ஆண்டுகளாக பிரச்னை இருந்தது.கடந்த 2014 ம் ஆண்டு செப்டம்பர் 28 ம் தேதி, கங்காவதி டவுனில் உள்ள திரை அரங்கில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக, இரு சமூக வாலிபர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.அன்றைய தினம் இரவு, தலித் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்த, இன்னொரு சமூகத்தினர் குடிசைகளுக்கு தீ வைத்தனர்.இதில் 27 பேர் தீக்காயம் அடைந்தனர். இந்த வழக்கில் 117 பேர் மீது வழக்குப்பதிவானது.கொப்பால் மாவட்ட முதன்மை மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போதே 16 பேர் இறந்தனர். மீதம் 101 பேர் குற்றவாளிகள் என்று, கடந்த 21ம் தேதி அறிவிக்கப்பட்டனர். தீர்ப்பு 24 ம் தேதி என்று, நீதிபதி சந்திரசேகர் கூறி இருந்தார்.அதன்படி நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. 101 பேரில் 98 பேருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ஆயுள் தண்டனை மற்றும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.மீதம் 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்பை கேட்டு 98 பேரும் கண்ணீர்விட்டு அழுதனர்.ஒரே வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை