உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாழ்வியல் மாற்றம்!

வாழ்வியல் மாற்றம்!

'ஸ்மார்ட் போன்' உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் நம் நாட்டு பெண்களின் வாழ்வியலை மாற்றியமைத்துள்ளன. இது, அரசின் சேவைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும் பெற உதவுகின்றன. சமூக வலைதளங்களால், விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களுக்கு எதிராக பெண்கள், தைரியமாக புகார் அளிக்க முன்வருகின்றனர். அன்னபூர்ணா தேவி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

நடவடிக்கை தேவை!

பீஹாரில் தொழிலதிபர் கோபால் கெம்காவின் கொலைச் சம்பவம், புதிய வழியில் அரசியலாக்கப்படுகிறது. இதை, கவனத்தில் வைத்து அமைதியான முறையில் சட்டசபை தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் இப்போதே நடவடிக்கை எடுப்பது நல்லது. அதிகார பலம், பண பலம் போன்றவற்றால் அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்த கூடாது.மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்

ஒருங்கிணைந்து எதிர்ப்பு!

பீஹாரில் தேர்தல் கமிஷன் நடத்தும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையால், ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது. இது, அவர்களின் உரிமையை பறிக்கும் செயல். இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை காங்., நடத்தும்.பவன் கெரா, செய்தித்தொடர்பாளர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ