உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 மாதங்களில் மது விற்பனை 2,662 கோடி ரூபாய் கடந்த ஆண்டை விட ரூ.256 கோடி அதிகம்

3 மாதங்களில் மது விற்பனை 2,662 கோடி ரூபாய் கடந்த ஆண்டை விட ரூ.256 கோடி அதிகம்

புதுடில்லி:தலைநகர் டில்லியில் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 2,662 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நடந்த விற்பனையை விட, 256 கோடி ரூபாய் அதிகம் என அதிகாரிகள் கூறினர்.இதுகுறித்து, டில்லி தொழிற்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் கூறியதாவது:டில்லி மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 5.29 கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்துள்ளது. அதேபோல, டில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம், 5 கோடி பாட்டில்களும், டில்லி மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன், 3.65 கோடி பாட்டில்களும், டில்லி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைக் கடைகள் வாயிலாக, 2.91 கோடி பாட்டில்களூம் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.மொத்தம், 700 மதுக்கடைகள் வாயிலாக, 2,662 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடந்துள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், நான்கு நிறுவனங்களும் 15.93 கோடி பாட்டில்கள் மது விற்பனை செய்து, 2,403 கோடி ரூபாய் ஈட்டியிருந்தன.இந்த ஆண்டு விற்பனை 259 கோடி ரூபாய் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது. மது விற்பனை வருவாயை அதிகரிக்கவும், நுகர்வோருக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கவும் புதிய மதுபானக் கொள்கையை அரசு தயாரித்து வருகிறது.வெளிப்படைத்தன்மையுடன் தரமான மது விற்பனையை இந்தப் புதியை கொள்கை உறுதி செய்யும்.தலைமைச் செயலர் தர்மேந்திர குமார் தலைமையிலான குழு, பிற மாநிலங்களின் மதுபானக் கொள்கைகளை ஆய்வு செய்து புதிய கொள்கையை உருவாக்கி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி