உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்ப் வரி விதிப்பால் பாதிக்கப்படும் துறைகள் பட்டியல்: சலுகை அளித்து பாதுகாக்க மத்திய அரசு தீவிரம்

டிரம்ப் வரி விதிப்பால் பாதிக்கப்படும் துறைகள் பட்டியல்: சலுகை அளித்து பாதுகாக்க மத்திய அரசு தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பின் காரணமாக, எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக வரி 25 சதவீதம், அபராத வரி 25 சதவீதம் என 50 சதவீதம் வரி விதிப்பை இந்தியா மீது, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.அவரது இந்த 50 சதவீதம் வரி விதிப்பு, ஆக.,27 முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் எந்தெந்த தொழில் துறைக்கு எத்தனை சதவீதம் வரி விதிப்பு, அதனால் எந்தெந்த துறைகள் பாதிக்கப்படும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.அதன்படி ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், ஆர்கானிக் கெமிக்கல், இறால், கைவினைப்பொருட்கள், கார்ப்பெட், பர்னிச்சர், மெத்தைகள், வைரம், தங்க நகைகள், மெஷினரி, மெக்கானிக்கல் அப்ளையன்சஸ், வேளாண் உற்பத்திப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஸ்டீல், அலுமினியம், காப்பர், லெதர், காலணிகள் ஆகியவை 50 சதவீதம் வரி விதிப்பின் கீழ் வருகிறது. இந்த துறையினருக்கு பாதிப்பு ஏற்படும்.வாகனங்கள், உதிரி பாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பில் வருகிறது. மருந்துப்பொருட்கள், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பெட்ரோலியம் பொருட்கள் ஆகியவை வரியற்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளன.இந்த பட்டியலில் 50 சதவீதம் வரி விதிப்பின் கீழ் வரக்கூடிய தொழில் துறைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக, மத்திய அரசு கணித்துள்ளது.அத்தகைய துறையினருக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், அதிபர் டிரம்ப் கடைசி நேரத்தில் வரி விதிப்பை நிறுத்தி வைக்கவும் வாய்ப்பு உள்ளதாக, தகவல்கள் வெளியாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M Ramachandran
ஆக 26, 2025 23:21

நல்ல சுய நலமற்ற மத்திய அரசு நமக்கு அமைந்திருக்கு. கஷ்ட நிவர்த்தி தேய்கிறது.


Tamilan
ஆக 26, 2025 23:20

சலுகைகள் அனைத்தும் மேலும் மேலும் மக்களிடமே கொள்ளையடிக்கப்படும். அப்படி இங்கிருந்து அனைத்தையும் நாடுகடத்தவேண்டுமா? என்ன ஒரு கேனத்தனமான பொருளாதாரம் ?


Kumar Kumzi
ஆக 27, 2025 00:58

பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய பிச்சைக்காரன் ஒனக்கு இந்தியாவில் என்னடா வேல


Kumar Kumzi
ஆக 27, 2025 01:01

தமிழன் பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய மூர்க்கா ஒனக்கு இந்தியாவில் என்னடா வேல


Tamilan
ஆக 27, 2025 11:54

மோடியை பாத்து கேட்கவேண்டிய கேள்வி


உண்மை கசக்கும்
ஆக 26, 2025 22:23

தினசரி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மென்பொருள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய படுகிறதே. அதற்கு வரி இல்லையா? கட்டபொம்மன் இருந்து இருந்தால்.. யாரை கேட்கிறாய் வரி? வரி, டேரிஃ, வேடிக்கை வானம் பொழிகிறது, பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது வரி எங்களோடு வயலுக்கு வந்தாயா? டிராக்டர் ஒட்டினியா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழினிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைத்து பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் டாரிஃ?


m.arunachalam
ஆக 26, 2025 21:07

இவ்வளவு சங்கடங்கள் உள்ள விஷயம் இது. இதில் எத்தனையோ மக்களின் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பாதிக்கப்படும்.. ஆனால் நிறைய அறிவு ஜீவிகள் யூ ட்யூபில் வெட்டி ஜம்பமாக பலவற்றையும் பதிவிடுகின்றனர்.


புதிய வீடியோ