உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்; டாக்டர்கள் தகவல்

பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்; டாக்டர்கள் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி, 96, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டிசம்பர் 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் வினித் சூரி கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 96 வயதான, எல்.கே.அத்வானிக்கு நரம்பியல் துறையின் டாக்டர் வினித் சூரி சிகிச்சை அளித்து வருகிறார். அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அவர் ஐ.சி.யூ.வில் இருந்து அடுத்த இரண்டு நாட்களில் மாற்றப்படுவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAMAKRISHNAN NATESAN
டிச 18, 2024 10:22

நலம் பெற்று வரட்டும்.. பிரார்த்தனைகள்.. களப்பணி ஆற்ற இயலாத வயதெனினும் அவர் இருப்பதே ஒரு தெம்பு ........


ramesh
டிச 18, 2024 09:44

இந்த செய்தி மனதுக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது . அத்வானி அவர்கள் நீண்ட நாள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். நான் திமுக ஆதரவாளர் என்றாலும் நான் 30 ஆண்டுகளாக பிஜேபி ஆதரவாளன் . தற்போது பிஜேபியை ஆதரிக்கவில்லை . அத்வானி பிஜேபி யை வளர்த்த விதத்தை பார்த்து தான் அவரது தீவிர ஆதரவாளர் ஆனேன் .அவர் ஒதுக்க பட்டதால் தான் மனம் மாறியது .எப்படி இருந்தாலும் எனது ஒரே தலைவர் அத்வானி அவர்கள் மட்டுமே


sundarsvpr
டிச 18, 2024 08:05

நேர்மையான தேசிய உணர்வு உள்ள அரசு நாட்டை அரசாள்கிறது. மூத்த தலைவர் அத்வானி வாழ்த்தும் ஒரு காரணமாகும். மூத்த தலைவர் நின்ற காலம் வாழ ஆண்டவனை பிராத்திக்கிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை