உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா ஒத்திவைப்பு; ராஜ்யசபாவில் ஜக்தீப் தன்கர் வெளிநடப்பு

லோக்சபா ஒத்திவைப்பு; ராஜ்யசபாவில் ஜக்தீப் தன்கர் வெளிநடப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்டித்து, ஜக்தீப் தன்கர் வெளிநடப்பு செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10ம் தேதி துவங்கியது. ஏப்., 4 வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடர் துவங்கி முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (மார்ச் 28) காலை 11 மணிக்கு பார்லிமென்ட் இரு அவைகளும் கூடியது. லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது.சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்.பி.,க்கள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கூச்சல் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். அதேபோல் ராஜ்யசபாவிலும் அவை கூடியதில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அலுவல் ஆய்வு குழு கூட்டத்திலிருந்து ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் வெளிநடப்பு செய்தார். அவர் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்டித்து, அவையில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால் ராஜ்யசபா துணை தலைவர் அவையை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Venkataraman
மார் 28, 2025 23:09

இதே போல தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் இருப்பதில்லை. எதிர்கட்சியினர் கூச்சல் போட்டால் அவர்களை காவலர்கள் உதவியுடன் வெளியே தூக்கி எறிந்து விட்டு ஆளும் கட்சியினர் மட்டும் தனியாக கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள். இதுபோல பாராளுமன்றத்திலும் நடத்தப்பட மஸ்ரீவேண்டும்


Nagarajan D
மார் 28, 2025 18:05

சகவாச தோஷம் எதிர்க்கட்சிகள் வெளிநாடாப்பெல்லாம் நடப்பதற்கு காரணம். எவன் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தாலும் அவன் தேச துரோகியாக தான் இருக்க முடிகிறது...


rama adhavan
மார் 28, 2025 17:20

ஆளும் கட்சி, எதிர் கட்சி என சபையில் உட்கார வைக்காமல் அனைத்து கட்சி உறுப்பினர்களையும், பெண்கள் உட்பட, பெயர் வரிசையில் அமர்ந்து உரையாட சொல்ல வேண்டும். அதேபோல் கூச்சல் போடும் உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும். முதலில் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும். ஜனநாயக கடமை கூச்சல் போடுவது அல்ல.


என்றும் இந்தியன்
மார் 28, 2025 16:49

இன்று சட்டசபையில் அதிமுகவினர் அமளி சபாநாயகர் ஆக்சன் இன்று ஒரு நாளைக்கு சஸ்பெண்ட் . இந்த மாதிரி இவர்களையும் என் செய்யவில்லை லோக்சபாவில். அதுமட்டுமல்லாமல் அவர்கள் சம்பளம் எவ்வளவோ அந்த நாளைக்கு கொடுக்கக்கூடாது மற்றும் அதே அளவிற்கு Fine / அபராதம் கட்டவேண்டும். அப்போது தான் இது அடங்கும்,


Petchi Muthu
மார் 28, 2025 15:41

எதிர்க்கட்சிகளுக்கு எம்பிகளுக்கு வரம்பு மீறி செயல்படுவதற்கு கட்டுப்பாடுகள் வேண்டும்... அலுவல் நேரம் மீன் அடிக்கப்படுகிறது


Appa V
மார் 28, 2025 18:10

மீன் அடிக்கிறாங்களா ?


புதிய வீடியோ