உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இவையெல்லாம் இண்டியா கூட்டணியின் குணாதிசயங்கள்: எதை சொல்கிறார் மத்திய அமைச்சர்!

இவையெல்லாம் இண்டியா கூட்டணியின் குணாதிசயங்கள்: எதை சொல்கிறார் மத்திய அமைச்சர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் குடும்ப அரசியல் தான் இண்டியா கூட்டணியின் குணாதிசயங்கள்'' என மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது: ஜார்க்கண்ட் மக்கள் ஏழைகளாகவே உள்ளனர். ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டிலிருந்து பணம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் பல ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது இண்டியா கூட்டணியில் தலைவிரித்தாடும் ஊழல் என்பது தெளிவாகிறது.ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் குடும்ப அரசியல் தான் இண்டியா கூட்டணியின் குணாதிசயங்கள். கர்நாடகாவில், ஒரு கிராமத்தில் ஹனுமன் உருவம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடியை அரசு அகற்றியது. இது அவர்களின் விரக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி